காந்தி, பகத் சிங், சுபாஷ் சந்திரபோசும் பயங்கரவாதியே - சீமான்

Report Print Basu in இந்தியா
காந்தி, பகத் சிங், சுபாஷ் சந்திரபோசும் பயங்கரவாதியே - சீமான்
429Shares

மக்களின் உரிமைக்காக போராடுகிறவன் கிளர்ச்சி செய்பவன் பயங்கரவாதி என்றால் காந்தி, பகத் சிங், சுபாஷ் சந்திரபோசும் பயங்கரவாதியே என சீமான் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் தொடரும் மதுவிலக்கு தொடர்பான நடவடிக்கை தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது.

கோயில், பள்ளிக்கூடங்கள் அருகில் மதுகடை இருப்பதை அரசே ஏற்றுக்கொண்டுள்ளது, முதலில் அப்படி எந்த கடையும் இல்லை என்று மறுத்த அரசு, தற்போது அதை மூட ஏற்பாடு செய்கின்றது என்றால் என்ன அர்த்தம்?

படிபடியாக மதுக்கடைகள் மூட வேண்டும் அப்படி மூடினால் நாங்கள் அதை வரவேற்ப்போம்.

சமூக வலைதளங்களில் பிரபாகரன் மீண்டும் வந்து போர் நடத்துவார் என்று கூறுப்படுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சீமான்,

அவரை பார்த்து விட்டு வந்தவர் யாராவது பதிவு செய்திருப்பார். ஆனால், இது போன்று பதிவின் மூலம் இடையூறுகள் அதிகரிக்கும், இலங்கையிலும், வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு இதனால் இடையூறு ஏற்படும்.

அவர்களை பிடித்து சிறையில் அடைப்பது போன்ற நிகழ்வுகள் ஏற்படும். இதுபோன்ற செயல்களை தவிர்த்து கொள்வது நல்லது.

இறுதியாக கஷ்மீரில் கொல்லப்பட்ட தீவிரவாதி புர்ஹான் குறித்து கேள்விக்கு சீமான் கூறியதாவது,

இந்த நாட்டில் என்போன்றவர்க்கு யார் தீவரவாதி, யார் தேசியவாதி, யார் பயங்காரவாதி என்ற வரையரையே சரியாக இல்லை. யாராக இருந்தாலும் அவரின் மரணம் பாதிப்பை ஏற்படுத்துகின்றது அல்லவா.

மக்களின் உரிமைக்காக போராடுகிறவன் கிளர்ச்சி செய்பவன் பயங்கரவாதி என்றால் காந்தி, பகத் சிங், சுபாஷ் சந்திரபோசும் பயங்கரவாதியே என சீமான் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments