தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்யாத 165 வேட்பாளர்கள்!

Report Print Arbin Arbin in இந்தியா
தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்யாத 165 வேட்பாளர்கள்!

கால அவகாசம் முடிவடைந்த பிறகும், சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் 165 பேர் இதுவரை தங்களது செலவுக் கணக்குகளை தாக்கல் செய்யவில்லை என தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து ஒரு மாதத்துக்குள் அனைத்து வேட்பாளர்களும் தங்களது தேர்தல் செலவுக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.

இதன்படி, தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டவர்கள் தங்களது செலவுக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய ஜூன் 18ம் திகதி கடைசி நாளாகும். போட்டியிட்ட 3,728 பேரில் 3,563 பேர் தங்களது செலவு கணக்கு விவரங்களை அளித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்டவற்றின் சார்பில் போட்டியிட்ட 996 பேரில் 979 பேரும், பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட 1,179 பேரில் 1,118 பேரும், சுயேச்சை வேட்பாளர்கள் 1,554 பேரில் 1,466 பேரும் செலவு-கணக்கு தகவல்களை தாக்கல் செய்துள்ளனர்.

விவரங்களைத் தாக்கல் செய்யாத 165 பேரும் விரைந்து செலவு-கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டுமாறு தேர்தல் ஆணையத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும்.

நோட்டீஸுக்கு பதிலளிக்காமல், உரிய காலத்தில் செலவு-கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்யாவிட்டால் சம்மந்தப்பட்டவர்கள் உத்தரவு பிறப்பிக்கப்படும் திகதியில் இருந்து, மூன்று ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்றார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments