மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலகியது தேமுதிக

Report Print Fathima Fathima in இந்தியா
மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலகியது தேமுதிக

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக- தமாகா அணிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.

ஆனால் போட்டியிட்ட 234 தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக தேமுதிக அணியின் பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் அறிவித்துள்ளார்.

மேலும் தேமுதிக தலைமையை ஏற்கின்ற கட்சிகள் இணைந்து கொள்ளலாம் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்கு பின் கட்சியாளர்களை சந்தித்த விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலகுவதற்கான முடிவை எடுத்ததாக தெரிகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments