விஜயகாந்த், வாசனை யார் சேர்த்துக் கொள்வார்கள்? கொந்தளித்த வைகோ

Report Print Arbin Arbin in இந்தியா
விஜயகாந்த், வாசனை யார் சேர்த்துக் கொள்வார்கள்? கொந்தளித்த வைகோ

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகும் முடிவை விஜயகாந்த், ஜி.கே.வாசன் ஆகியோர் எடுத்து வருவதாக வெளியான தகவலுக்கு, அவர்களை யார் சேர்த்துக் கொள்வார்கள் என வைகோ கொந்தளித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் தந்த கசப்பான அனுபவங்களால் தங்களுக்கான அரசியல் இடத்தை தக்கவைத்துக்கொள்ள மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுவதே சிறந்த முடிவு என தேமுதிக, தமாகா வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மதிமுக நிர்வாகிகள் பங்கேற்ற உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் தாயகத்தில் நடைபெற்றுள்ளது. அதில் மக்கள் நலக் கூட்டணியோடு தேர்தலை சந்தித்ததால் வந்த விளைவுகள், உள்ளாட்சி தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள், கட்சியை விட்டுப் போன முக்கிய நிர்வாகிகள் என பலவற்றைப் பற்றியும் விரிவாகப் பேசியிருக்கிறார் வைகோ.

ஒவ்வொரு காலகட்டத்திலும், கட்சிக்குள் இருந்து சிலர் வெளியே போவார்கள்; சிலர் உள்ளே வருவார்கள். அதைப்பற்றியெல்லாம் நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது.

தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்றாக உருவான மக்கள் நலக் கூட்டணி அப்படியேதான் இருக்கிறது. அது என்றைக்கும் தன் நிலைப்பாட்டில் இருந்து மாறாது.

தே.மு.தி.கவும், த.மா.காவும் கூட்டணிக்குள் நீடித்து இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். நம் எண்ணப்படி அவர்கள் இல்லை. அப்படி அவர்கள் போனால் போகட்டும்.

அவர்களை இனி எந்தக் கட்சியும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாது. தொடக்கத்தில் நாம் உருவாக்கிய மக்கள் நலக் கூட்டணி அப்படியே இருக்கிறது. பின்னாளில்தான் அவர்கள் இருவரும் நம்முடன் அணி சேர்ந்தார்கள்.

நாம் உருவாக்கிய மக்கள் நலக் கூட்டணியோடு உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தால், கணிசமான அளவுக்கு இடங்களைப் பெறுவோம். இவ்வளவு நாள் நாம் பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைக்கும் எனப் பேசியிருக்கிறார் வைகோ.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments