அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் முதலிடம் பிடித்த கட்சி!

Report Print Arbin Arbin in இந்தியா
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் முதலிடம் பிடித்த கட்சி!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் அதிமுக கட்சி முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

இந்த தேர்தலில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் பட்டியலில் 27 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

இவற்றில் அதிமுக 16 தொகுதிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. திமுக 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 2 இடங்களை தக்க வைத்துள்ளது.

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளராக திமுக தலைவர் கருணாநிதியே உள்ளார். அவர் 68,366 வாக்கு வித்தியாசத்தில் பெற்றி பெற்றுள்ளார்.

அவரை அடுத்து அதிமுக வேட்பாளர் எஸ்.பி வேலுமணி 64,041 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக் கனியைப் பறித்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் இது கடந்த முறையைவிடவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments