சோனியா, ராகுல் காந்தி கைது

Report Print Fathima Fathima in இந்தியா
சோனியா, ராகுல் காந்தி கைது

மத்திய அரசுக்கு எதிராக பேரணியாக சென்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இன்று காலை ஜந்தர் மந்தர் பகுதியில் ஜனநாயகத்தை காப்போம் என்ற முழக்கத்துடன் காங்கிரஸ் கட்சியின் பேரணி நடத்தினர்.

பேரணியின் முடிவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சோனியா காந்தி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மோடி அரசு எடுக்கும் நடவடிக்கைகள் நாட்டை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.

மோடி அரசை வழி நடத்தி கொண்டிருக்கும் RSS அமைப்பினரே நன்றாக கேளுங்கள், உங்களது எண்ணங்களை நாங்கள் நிறைவேற்ற விடமாட்டோம்.

எங்கள் மீது எத்தனை குற்றங்களை சுமத்தினாலும் பரவாயில்லை, ஒருபோதும் நாங்கள் அடிபணிய மாட்டோம், வாழ்க்கை எனக்கு நிறைய போராட கற்றுக் கொடுத்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சி பற்றி குறைவாக மதிப்பிட வேண்டாம், ஜனநாயக விரோத சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி எப்போதுமே போராடும் என பேசியுள்ளார்.

தொடர்ந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போது சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர், பின்னர் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments