உலகை சுற்றி வரும் திட்டம்: பாய்மர படகில் சென்னை வந்த கடற்படை வீராங்கனைகள்

Report Print Tony Tony in இந்தியா
உலகை சுற்றி வரும் திட்டம்: பாய்மர படகில் சென்னை வந்த கடற்படை வீராங்கனைகள்

கடற்படையில் சேருவதற்கு இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்திய கடற்படை வீராங்கனைகள் பாய்மர படகில் உலகைச் சுற்றி வர திட்டமிட்டுள்ளனர்.

கடற்படையை சேர்ந்த வீராங்கனைகள் வர்த்திகா ஜோஷி, பிரதீபா ஜாம்வால், சுவாதி, விஜயதேவி, பாயல் குப்தா ஆகிய 5 பேர் ‘ஐ.என்.எஸ். மதே’ என்னும் இந்திய கடற்படைக்கு சொந்தமான பாய்மர படகில் அடுத்த ஆண்டு உலகைச் சுற்றி வர பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

கடற்படையில் சேருவதற்கு இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த பயணம் இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் முன்னோட்டமாக இவர்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து மாதே பாய்மரப் படகு மூலம் கடந்த 9-ந்தேதி புறப்பட்டு நேற்று மாலை 4 மணி அளவில் சென்னை துறைமுகம் வந்தனர்.

உலகச் சுற்றுப்பயணம் குறித்து தெரிவித்த அவர்கள், கடற்படை வீராங்கனைகள் வரலாற்றில் முதல் முறையாக உலகை பாய்மர படகில் சுற்றி வர இருப்பதாக தெரிவித்தனர்.

உலக பயணம் என்பதால் காலநிலைக்கு தகுந்தாற்போல பயணம் மேற்கொள்வது, உடல் மற்றும் மனதளவில் தயார்படுத்திக்கொள்வது குறித்து சிறப்பு பயிற்சி பெற்றுள்ளதாக கூறினர்.

இதுகுறித்து கமாண்டர்கள் திலீப் தோண்டே, அபிலாஷ் டோமி ஆகியோரிடம் ஆலோசனை பெற்றுள்ளதாகவும்,

விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வந்த பயணத்தில் எந்தவித சவால்களையும் சந்திக்கவில்லை என்றனர்.

உலக சுற்றுப்பயணம் செல்வதற்கு எங்களை முழுமையாக தயார்படுத்திவிட்டோம் என்று நம்புவதாக குறிப்பிட்ட அவர்கள்,

எங்கள் பயணம் தொடங்கி திட்டமிட்டபடி முடிவடையும்போது, உலகை பாய்மர படகில் சுற்றி வந்த பெண்கள் என்ற பெருமை எங்களுக்கு கிடைக்கும் என்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments