எந்த கூட்டணியாலும் அதிமுகவை வெல்ல முடியாது: மு.க.அழகிரி அதிரடி

Report Print Tony Tony in இந்தியா
எந்த கூட்டணியாலும் அதிமுகவை வெல்ல முடியாது: மு.க.அழகிரி அதிரடி

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறாது என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி பேசுகையில், திமுக-காங்கிரஸ் இரண்டிற்குமே கொள்கை இல்லை.

காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்தோம், அமைச்சரவையில் இருந்தோம், அதன் பிறகு காங்கிரஸை விட்டு திமுக விலகியது.

அதன் பிறகு காங்கிரஸ் கட்சியை திமுக நன்றி கெட்டவர்கள் என்றனர்.

நன்றி கெட்டவர்கள் என்று கூறிவிட்டு பிறகு கனிமொழி எம்.பி. பதவிக்காகச் சென்று பிச்சை எடுத்தார்கள்.

மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி என்கிறார்கள். அதனால்தான் இரண்டு கட்சிகளுக்குமே கொள்கையே இல்லை என்கிறேன்.

சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கூட்டணியாலும் அதிமுகவை வெல்ல முடியாது.

கட்சியில் ஏகப்பட்ட உட்பூசல்கள் உள்ளது. கருணாநிதியை கட்சியில் ஒதுக்கி வைத்துள்ளனர்.

மேலும், ஸ்டாலினையும் அவரது குடும்பத்தையும் கட்சியில் முன்நிறுத்துவதால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெறாது என்பது என்னுடைய கருத்து என பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments