தந்தையின் இறுதிச் சடங்கை மகனைப் போல முன் நின்று நடத்திய புதுமைப்பெண்

Report Print Tony Tony in இந்தியா
தந்தையின் இறுதிச் சடங்கை மகனைப் போல முன் நின்று நடத்திய புதுமைப்பெண்

மஹாராஸ்டிராவில் இளம்பெண் ஒருவர், தனது தந்தையின் இறுதிச் சடங்கை மகனைப் போல முன் நின்று நடத்தியுள்ளார்.

தானே மாவட்டம் பத்லாப்பூர் பகுதியை சேர்ந்த குர்சர் (56) என்பவருக்கு 3 மகள்கள் உள்ளனர்.

வறுமையின் பிடியில் இருந்த போதிலும் குர்சர் தனது மூத்த மகள் தீபிகாவை (24) பி.காம் படிக்கவைத்துள்ளார்.

இந்நிலையில், அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் குர்சர் படுத்த படுக்கையானார்.

இதையடுத்து தீபிகா தனி ஆளாக தன் குடும்பத்தை காப்பாற்ற தொடங்கியுள்ளார்.

தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த அவர் தன் தங்கைகள் 2 பேருக்கும் முன்நின்று திருமணம் செய்துவைத்துள்ளார்.

தீபிகாவின் தந்தை நேற்று முன்தினம் உடல்நிலை மோசமாகி உயிரிழந்துள்ளார்.

அவரது இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்தபோது ஆண் மகனுக்கு பதிலாக உறவினர்கள் யாராவது முன்வந்து அவரது இறுதி சடங்கை செய்யுமாறு பெரியவர்கள் அழைத்துள்ளனர்.

ஆனால் யாரும் அவர் இறுதி சடங்கை நடத்த முன்வராத நிலையில், தீபிகா தன் தந்தைக்கு ஈமச்சடங்கை செய்ய உரிமைகோரியுள்ளார்.

இதற்கு அங்கு கூடி நின்ற பெரியவர்கள், இந்து முறைப்படி பெண் குழந்தைகள் சடங்கை செய்யக்கூடாது அது நம் கலாசாரம் அல்ல என மறுத்துள்ளனர்.

ஆனால் தீபிகா, என் குடும்பத்தில் அனைத்து கடமைகளையும் நான் ஆண் மகன் போல் நின்று நிறைவேற்றினேன்.

எனக்கு இந்த இறுதிச்சடங்கை செய்ய அனைத்து உரிமையும் உள்ளது. எனது தந்தைக்கு இறுதி சடங்கை நானே முன்னின்று செய்வேன் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தீபிகா, தன் தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்கு கடமைகளை செய்து சிதைக்கு தீ மூட்டியுள்ளார்.

மேலும், தீபிகாவின் துணிச்சலான இச்செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments