கருணாநிதி மரணம்! அவரது டுவிட்டர் பக்கத்தில் உடனடியாக மாற்றப்பட்ட புகைப்படம் எது தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்ததையடுத்து அவரது டுவிட்டர் பக்கத்தில், அவர் தொடர்பான புகைப்படம் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை நேற்று மோசமான நிலையை எட்டியதால், 24 மணி நேரம் டைம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை கருணாநிதி இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மரண செய்தியைக் கேட்டும் தொண்டர்கள் மருத்துவமனை முன்பு எழுந்து வா தலைவா என்று கண்ணீர் மல்க கூறி வருகின்றனர்.

இதையடுத்து அவரது டுவிட்டர் பக்கத்தில், பொற்கால ஆட்சி தந்த தமிழினத் தலைவர் கலைஞர் 95 என்று எழுதப்பட்டு, அவர் தொடர்பான புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது.

தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்