வீட்டு வேலைக்கு வருபவர்களிடம் கவனமாக எப்படி இருப்பது?

Report Print Nalini in வீடு - தோட்டம்
282Shares

கொரானா பாதிப்பு காரணமாக பல நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கும் மேலாக வீட்டிலேயே நாம் அனைவரும் முடங்கி போயுள்ளோம்.

இதனால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில் உள்ளதால் மத்திய அரசாங்கம் வேறு வழியின்றி ஒரு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால் சாலையில் ஓரளவுக்கு மக்கள் நடமாட்டம் காண முடிகிறது.

இப்பொழுது நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழலில் நாம் அனைவரும் இருக்கிறோம்.

இந்தக் கிருமித் தொற்று யாரிடமிருந்து வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழல் இருக்கிறது. எனவே முன்பைவிட இப்போதுதான் மிகவும் எச்சரிக்கையாக நாம் இருக்க வேண்டும்.

விதிமுறைகளை நாம் பின்பற்றினாலும் நம் வீட்டுக்கு வருபவரும் இந்த விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்று நம்மால் கவனித்து கூற முடியாது.

முடிந்தவரை நாம் அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும், நம் வீட்டுக்கு வருபவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. நாம் மட்டும் அல்ல வீட்டு வேலை செய்ய வருபவர்களின் ஆரோக்கியமும் நமக்கு முக்கியம்.

வீட்டிற்கு வேலைக்கு வருபவர்களிடம் என்ன செய்யச் சொல்லலாம், என்ன செய்ய சொல்லக் கூடாது என்பதை பற்றி பார்ப்போம்:

  • அவர்கள் வேலைக்கு வருவதற்கு முன்பு வீட்டுக்கு வெளியே முகமூடி மற்றும் கையுறைகளை கண்டிப்பாக அணிவித்து தான் நம் வீட்டிற்குள் வர வேண்டும் என்று சொல்லி விட வேண்டும்.
  • வீட்டிற்கு வந்ததும் கை, கால், முகங்களை கழுவ சொல்லி பின்னர் வேலைகளை செய்ய சொல்லலாம்.
  • தினமும் இரு முறை அவர்களை குளிக்க பரிவுடன் ஆலோசனை சொல்லலாம்.
  • முடிந்தவரை தினமும் புதிய கையுறை மற்றும் புதிய முகமூடியை அவர்களுக்கு கொடுத்தனுப்புங்கள்.
  • வேலைக்கு வருபர்களிடம் அவர்கள் தினமும் பயன்படுத்தும் முககவசம், கையுறைகளை நன்றாக சோப்பில் ஊறவைத்து அலசி அதை வெயிலில் காய வைத்து பயன்படுத்த கூற வேண்டும்.
  • சற்று நாளைக்கு எல்லா தேவைகளுக்கும் அவர்களையே நாடாமல் உங்களுக்கு வேண்டியதை நீங்களே செய்ய பழகுவது நல்லது.
  • இந்த பிரச்சனைகள் முடியும் வரை, அனைத்து வேலையாட்களிடம் சற்று விலகி நின்று பேச வேண்டும்.
  • முடிந்தவரை நேரில் சென்று பேசுவதை தவிர்த்து விட்டு தொலைபேசியில் மூலம் பேசலாம்.
  • அவர்கள் பாத்திரம் கழுவி விட்டு சென்று விட்டாலும் நீங்களும் கையுறைகளை அணிந்து பாத்திரங்களை ஒருமுறை கழுவி விடுவது நல்லது. பாதுகாப்பாக இருப்பது எல்லோருக்கும் அவசியம்.
  • புதிய கையுறைகள் மற்றும் முகமூடிகள் வாங்கி வைத்துக்கொள்வது மிகவும் நல்லது.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்