வீட்டில் ஏசி அமைக்கும் அளவிற்கு அனைவருக்கும் பொருளாதார வசதி கிடையாது. கொளுத்தும் வெயிலால் வீட்டில் அதிக அளவு உஷ்ணம் ஏற்படும்.
இதனால் வீட்டில் இருந்தால் கூட புழுக்கமும், வியர்வையும் அதிகளவில் வெளியேறும். இதனால் சோர்வும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உங்கள் வீட்டை குளிர்க்க வைத்துக் கொள்ள சில வழிமுறைகள் இருக்கு. இதை ட்ரை பண்ணி பாருங்க:
- வீட்டு மாடியில் தோட்டங்கள் வளர்க்கலாம். சின்ன சின்ன தோட்டங்கள் மாடியில் வளர்ப்பதால் வெளியிலிலிருந்து உங்கள் வீட்டை பாதுகாத்துக் கொள்ளலாம்.
- பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். இது ஈரப்பதத்தை குறைத்து குளிர்ச்சியாக உணர வைக்கும்.
- வீட்டை சுற்றி மரங்களை நட்டு வைக்கலாம். இவை நீண்டகால திட்டமாக இருக்கலாம், ஆனால் இதனால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
- வீட்டில் நேரடியாக சூரிய ஒளி பட்டால் வீடு கொஞ்சம் உஷ்ணமாக இருக்கும். அதனால் சூரிய ஒளி வீட்டில் வருவதை தடுத்த பிளைண்ட்ஸ், திரைச்சீலைகளை ஜன்னல்களுக்கு வெளியே வைத்து மறைத்தால் அறையில் சூரிய ஒளி நேரடியாக விழாமல் அறையின் வெப்பநிலை சற்று தணியும்.
- ஒளி விளக்குகள் வெப்பத்தை உருவாக்கும். குறிப்பாக பல்புகளை நீங்கள் மாற்ற முடியவில்லை என்றால் அதன் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். இது கோடையில் சில வீடுகள் மின்சார செலவைக் குறைக்க உதவும்.
- கதவுகளை மூடியபடி வைக்க வேண்டும். இது நாள் முழுவதும் வீட்டின் வெப்பத்தை சற்று தணிக்கும்.
- குளிரான நேரத்தில் சமைப்பதுதான். வீட்டின் பின்புறத்தில் சமைப்பது வீட்டின் வெப்பநிலையை குறைக்கும்.
- வெள்ளை துணி கவர்கள் உங்கள் பர்னிச்சர்களில் குறைந்த வெப்பத்தைத் தக்கும். இது சூரிய ஒளியில் இருந்து குறைவான வெப்பத்தை உறிஞ்சுவதால் வீட்டின் பர்னிச்சர்கள் மற்றும் உட்புறம் குளிர்ச்சியாக இருக்கும்.
- வீட்டின் இருபுறமும் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். இது உங்கள் வீட்டின் வெப்பநிலையை குறைக்க உதவுகிறது.
- ஜன்னலின் மீது பாக்ஸ் விசிறியை வைத்தால் சூடான காற்றை வெளியே தள்ளும். பலரும் அறியாத விஷயம் இது. சில நேரங்களில், ஒரு செயற்கை தென்றலை உருவாக்குவதை விட வெப்பத்தை வெளியேற்றுவதற்கு மின்விசிறியை உபயோகிப்பது நல்லது.
- முடிந்தளவு எலக்ட்ரானிக் கருவிகளை குறைவாக உபயோகிப்பதே வீட்டின் வெப்பநிலையை குறைக்கும். ஒரு கருவி பயன்பாட்டில் இல்லாதபோது அதன் ப்ளக்கை கழட்டி விட்டு விடுவது நல்லது.
- ஒரு கிண்ணத்தில் சிறிது ஐஸ்கட்டியை எடுத்து, மின்விசிறி முன் வைத்தால் உங்கள் அறையை ஏர்கண்டிஷனர் போல இருக்கும்.
- பாத்ரூம் மற்றும் சமையலறையில் மின்விசிறியை பயன்படுத்தினால் நீராவியை வெளியேற்றும். ஏசியை பயன்படுத்தாத நாட்களில் இவ்வாறு செய்யும்போது உங்கள் வீட்டின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களை உணர்வீர்கள்.