வீட்டில் எறும்பு தொல்லையா? இவற்றை கொண்டு விரட்டுங்கள்!

Report Print Gokulan Gokulan in வீடு - தோட்டம்

வீட்டை என்னதான் சுத்தமாக வைத்தாலும் எறும்புகளிடமிருந்து நாம் தப்பித்துக் கொள்ள முடியாது.

மூலைமுடுக்கு, ஜன்னல், சமையல் அறை பருப்பு டப்பாக்கள் போன்றவற்றில் எறும்பு பிடித்து பொருட்களை நாசம் செய்யும்.

எறும்புகளை ஓட விரட்ட வேண்டும் என்றால் இதை செய்யுங்கள்:

சாக்பீஸ்

எறும்புகள் இருக்கும் இடத்தில் சாக்பீஸால் கோடு போடுங்கள். சாக்பீஸில் கால்சியம் கார்பனேட் அதிமாக இருப்பதால் அந்த பக்கத்தில் தலை வைத்து படுக்காது.

எலுமிச்சை

எறும்புகள் வரும் இடத்தில் எலுமிச்சை சாறை பிழிந்துவிடுங்கள் அல்லது எலுமிச்சை தோலை வைத்தால் எறும்புகள் வருவதை தவிர்க்க முடியும்.

மிளகு

மிளகின் நெடி எறும்புகளுக்கு பிடிக்காது அதனால் எறும்பு வரும் இடத்தில் மிளகின் பொடியை தூவி விடுங்கள்.

உப்பு

எறும்புகள் நுழையும் இடம் மூலை முடுக்குகளில் உப்பை தூவி விடுங்கள். இப்படி செய்தால் எறும்பு வருவதை தடுக்க முடியும்.

வினிகர்

தண்ணீர் மற்றும் வினிகர் இரண்டையும் சம அளவில் கலந்து எறும்பு வரும் இடத்தில் தெளித்துவிடுங்கள். எறும்புகள் வரவே வராது.

பட்டை

பட்டை அல்லது கிராம்புப் பொடிகளை தூவினாலும் எறும்பு அந்த இடத்தில் தலை வைத்து படுக்காது.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்