கொசுக்களை விரட்டி அடிக்கும் பேய் மிரட்டிச் செடி…

Report Print Gokulan Gokulan in வீடு - தோட்டம்
188Shares

என்னடா பெயரைக் கேட்டதுமே ஷாக் ஆயிட்டிங்களா… அட உண்மையிலேயே பேய் மிரட்டி செடி உள்ளது. இது புதர்கள் உள்ள இடத்தில் காணப்படும்.

பேய் மிரட்டி செடியின் இலையிலிருந்து ஒரு வாடை வரும். இந்த வாடைக்கு எந்த பூச்சிகள், கொசுக்கள் இந்த செடி பக்கம் வராது.

அந்த காலத்தில் கொசுக்களை விரட்ட இந்த பேய் மிரட்டி செடியைதான் கொளுத்தி விடுவார்கள்…

இந்த செடியின் இலையின் அற்புதம் என்னவென்று தெரியுமா… இந்த இலையை எடுத்து சுருட்டி மடித்து விளக்கில் எண்ணெய் வைத்து ஏற்றினால் நீண்ட நேரத்திற்கு ஒளி மிளிரும்.

இப்பொழுதுதான் திரி போட்டு விளக்கை ஏற்றுகிறார்கள். நம் முன்னோர்கள் வீட்டில் விளக்கேற்ற இந்த இலையைதான் பயன்படுத்தினார்கள்.

இந்த பேய் மிரட்டி செடி இரண்டு வகைப்படும். ஒன்று ஆண் பேய் மிரட்டி செடி.. இன்னொன்று பெண் பேய் மிரட்டி செடி…

இந்த செடியை வீட்டில் வளர்த்தால் தீய சக்திகள் வீட்டை அண்டாது என்றும் வீட்டில் பணம் செழிக்கும் என்று சொல்வார்கள். இந்த செடியை குபேர மூலிகை என்றும் அழைப்பார்கள்.

பேய் மிரட்டி செடியின் மருத்துவக் குணங்கள்

  • இந்த செடியின் இலைச்சாற்றை 5 சொட்டை சூடு தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், பல் முளைக்கும்போது ஏற்படும் வயிற்றுப்போக்கை சரி செய்யும்.

  • சூடு தண்ணீரில் 7 இலைகளை போட்டு நன்றாக கொதிக்க விட்டு நீராவி முகத்தில் படும் படி பிடித்தால் ஒற்றை தலைவலி, தலைபாரம் சரியாகும்.

  • வீட்டில் பூச்சி, கொசுக்கள் அதிகமாக இருந்தால் இந்த செடியின் இலையை அரைத்து வீடு முழுக்க தெளித்து வந்தால் எந்த பூச்சியும் வீட்டிற்குள் வராது.

  • பேய் மிரட்டி இலையை 5 எடுத்து, ஒரு கைப்பிடி நெற்பொறியுடன் சேர்த்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 50 மில்லியளவு வீதம் ஒரு நாளைக்கு 2 தடவை குடித்து வர காலரா பறந்து போகும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்