புது வீடு கிரக பிரவேசம் செய்ய உகந்த நாட்கள் எது? எந்த நேரத்தில் கிரகப்பிரவேசம் செய்தல் கூடாது?

Report Print Kavitha in வீடு - தோட்டம்

வாழப்போகும் வீடு, ஒருவரின் வாழ்க்கையை உயர்த்தவும் செய்யும், விருத்தி அடையவும் வைக்கும்.

எனவே நல்ல நாள், நேரம் பார்த்து புதுமனைக்கு குடிபுகுவது சிறந்ததாகும்.

அந்தவகையில் தற்போது கிரக பிரவேசம் செய்ய உகந்த நாள், மாதங்கள், நேரம் என்பவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.

  • சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாதங்களில் உகந்தது.
  • அசுவினி, ரோகினி, மிருகசீருஷம், புனர்பூசம், உத்திரம், அஸ்தம், சுவாதி, மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி முதலிய நட்சத்திரங்கள் சிறந்தது.
  • திங்கள், புதன், வியாழன், வெள்ளி, ஆகிய தினங்களில் சித்த அல்லது அமிர்த யோகம் உள்ள சமயமாகும்.
  • ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகிய லக்கனங்கள்.
  • மேற்கூரை கட்டாமலும் கதவு போடாமலும் சுவர் தரை பூசாமலும் புதுமனை கிரகப்பிரவேசம் நடத்தக் கூடாது.
  • கிரகப்பிரவேசத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளும் லக்ன முகூர்த்தங்களான 6-7 நேரங்களிலும் வைக்கலாம்.
  • ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மற்றும் பங்குனி போன்ற மாதங்களில் வீடு கட்ட தொடங்குவது, புது வீட்டிற்கு குடி போகுதல் போன்ற சுப காரியங்கள் செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
  • ‌சி‌த்‌திரை, வைகா‌சி, கா‌ர்‌த்‌திகை, தை ஆ‌கிய மாத‌ங்க‌ள் ‌கிரக‌ப் ‌பிரவேச‌ம் செ‌ய்ய ஏ‌ற்ற மாத‌ங்கள் என்றாலும், ‌வீ‌ட்டி‌ன் உ‌ரிமையாள‌ர் இ‌ந்த மாத‌ங்க‌ளி‌ல் ஏதேனு‌ம் ஒ‌ன்‌றி‌ல் ‌பிற‌ந்‌திரு‌ந்தா‌ல் அ‌ந்த மாத‌த்‌தி‌ல் ‌கிரக‌ப் ‌பிரவேச‌ம் நட‌த்த‌க் கூடாது.
  • காலை 9 மணிக்குப்பிறகு கிரகப்பிரவேசம் செய்தல் கூடாது. அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும் கிரகப்பிரவேச வழிபாட்டிற்கு 5 மணிக்கு வந்து அவசரமாகவும், ஏனோ தானோ என்று செய்தல் வேண்டாம்.
  • வீட்டின் உரிமையாளர், அது கணவனாகவோ அல்லது மனைவியாகவோ யாராயிருந்தாலும், அவர்களின் ச‌ந்‌திராஷ‌்டம நா‌ட்க‌ளிலு‌ம், க‌ரி நா‌ளிலு‌ம் சுப கா‌ரிய‌ங்க‌ள் செ‌ய்ய‌க் கூடாது.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்