வாஸ்துப்படி இந்த சில செயல்களை செய்துவிடாதீங்க... பணம் தங்காதாம்!

Report Print Kavitha in வீடு - தோட்டம்
651Shares

நாம் வீட்டில் வைத்திருக்கும் சில பொருட்கள் உங்கள் வாழ்வில் பெரிய துரதிர்ஷ்டத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்துகின்றது.

அந்தவகையில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் வீட்டில் இருக்கும் பொருட்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

  • வீட்டில் பப்பாளி மரம், கறிவேப்பிலை மரம் மிகவும் கவனித்து வளர்க்க வேண்டும். பப்பாளி மரம் பெண்களையும், கறிவேப்பிலை ஆண்களையும் குறிக்கும்.
  • ஜாதி முல்லை, மல்லிகை, தாமரை, தும்பை, பாரிஜாதம், சாமந்தி போன்ற விநாயகர் மலர்களை வீட்டின் எல்லைக்குள் வளர்பது மனை தோசத்தை சரி செய்யும்.
  • முட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது.
  • தனியாக தென்னை மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது, தென்னை பிள்ளை மரத்தை ஜோடியாக தான் வளர்க்க வேண்டும்.
  • நன்றாக வளர்ந்த வேப்பமரத்தை அது மீண்டும் வளராமல் வெட்டப்பட்டால் அந்த வீட்டில் உள்ள ஒற்றுமை, சந்தோசம், ஆரோக்கியம் கெட்டு விடும்.
  • துணை இல்லாத அல்லது மறு கன்று இல்லாத வாழை மரத்தை வெட்டியவருக்கு வம்ச விருத்தி இருக்காது.
  • ஒற்றை பனைமரம் உள்ள இடத்தில வீடு கட்ட கூடாது.
  • வீட்டின் வாசலில் அல்லது நிலகதவை திறந்தவுடன் முருங்கை மரம் அல்லது மாமரத்தை பார்க்க கூடாது.
  • அசைவ கழிவுகள், மலமூத்திர கழிவு தேக்கம், பழைய துணிகள்,குப்பைகள் போன்றவற்றை வாசலில் இருக்க கூடாது.
  • சந்தன முல்லை, துளசி, பவளமல்லி, பன்னிர் செடி, திருநீர்பத்திரி, கற்பூரவள்ளி போன்ற தெய்விக வாசனை தாவரம்கள் வளர்க்க அம்பாளின் அருள் ஆசிகள் கிடைக்கும்.
  • கோபுரம் நிழல், அல்லது கொடிமரத்தின் நிழல் நம்முடைய மனையின் மீது விழாத படி வீடு கட்டவேண்டும் மேலும் பெருமாள் கோவிலின் பின்புறம் சிவன்,கணபதி கோவில் எதிர் புறம் வீடு கட்ட கூடாது.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்