வாஸ்துப்படி உங்கள் வீட்டில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் தூக்கி எறிந்துவிடுங்கள்....!

Report Print Kavitha in வீடு - தோட்டம்
406Shares

இந்துமதத்தில் வாஸ்து சாஸ்திரம் என்பது முக்கிய இடம் பெறுகின்றது.

வாஸ்து சாஸ்திரம் நமது வாழ்க்கையில் இரண்டற கலந்த ஒன்றாகத்தான் இருக்கிறது.

ஏனெனில் நாம் வசிக்கும் இல்லம் தொடங்கி நாம் வேலை செய்யும் அலுவலகம் படிக்கும் கல்லூரி என அனைத்திலும் வாஸ்துவிற்கு முக்கிய இடம் இருக்கிறது.

இந்நிலையில் வாஸ்துப்படி எந்ததெந்த பொருட்களை எந்த எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பது போல வீட்டில் எதை வைக்கக்கூடாது என்பதையும் கூறுவதாக இருக்கிறது.

அந்தவகையில் உங்கள் வீட்டில் என்னென்ன வைக்கக்கூடாது என்பதை பார்க்கலாம்.

  • வீட்டைச் சுற்றி அழுக்கு நீர் இருப்பது எதிர்மறை ஆற்றல் அதிகரிக்க வழிவகுக்கிறது மற்றும் வீட்டில் இருப்பவர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும்.
  • உங்கள் வீட்டிலோ, தோட்டத்திலோ, அலுவலகத்திலோ முள் செடிகளை வைக்கக்கூடாது, இந்த செடிகள் வீட்டில் இருப்பது உங்களுக்கு ஆரோக்கிய குறைபாட்டுகளை உண்டாக்கும். மேலும் இது உங்கள் இல்லத்தில் சச்சரவுகளை ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
  • உங்கள் வீட்டில் வேலை இருந்தால் வேலை முடிந்தவுடன் அந்த கற்களை அப்புறப்படுத்தி விடுங்கள். வீட்டிற்கு வெளியே கற்கள் இருப்பது பிரச்னைகளின் அறிகுறியாகும். இது உங்கள் குடும்ப முன்னேற்றத்திற்கு தடைகளை ஏற்படுத்தும்.
  • குப்பையை வீட்டிற்கு வெளியே வைப்பது ஒரு மோசமான வாஸ்துவாகும். வீட்டிற்கு வெளியே குப்பையை வைத்திருப்பது வீட்டில் நிதி சிக்கலுக்கு வழிவகுக்கிறது. மேலும் இது கடன் தொல்லையை அதிகரிக்கும்.
  • வீட்டிற்கு வெளியே மின்கம்பங்கள் இருப்பது மின்கம்பத்தில் சிக்கலான வயர்கள் இருப்பது போல உங்கள் வீட்டின் முன் மின்கம்பம் இருப்பது உங்கள் வாழ்க்கையையும் சிக்கலாக்கும். எனவே இது இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.
  • வீட்டிற்கு வெளியே பெரிய மரம் இருந்தால் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம். ஏனெனில் உங்கள் வீட்டிற்குள் சூரிய ஒளி வருவதை தடுக்கிறது. மேலும் இது உங்கள் வீட்டிற்குள் வரும் நேர்மறை ஆற்றலையும் தடுக்கிறது.
  • உங்கள் கதவு எப்போதும் ஒரே மட்டத்தில் அல்லது பிரதான சாலையை விட குறைவாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், உங்கள் வீட்டில் மற்றும் உங்கள் வாழ்க்கையில் நிறைய தொல்லைகள் மற்றும் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்