உங்க வீட்டில் பீரோவை இந்த திசையில் வைத்தால்... பணமும் செல்வமும் பெருகுமாம்!

Report Print Kavitha in வீடு - தோட்டம்
601Shares

நாம் வசிக்கும் வீடு என்பது அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கவேண்டும். இதற்கு வாஸ்து சாஸ்த்திரம் முக்கிய இடம் பெறுகின்றது.

வாஸ்துப்படி வீட்டின் மூலைப்பகுதி சரியாக அமைந்து அந்த மூலையில் சரியான பொருட்களை வைத்தால் செல்வம் பெருகும் என சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் உங்களது வீட்டில் செல்வம் குவிய பீரோவை எந்த இடத்தில் வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என பார்ப்போம்.

  • தென்மேற்கு படுக்கை அறையில் பீரோவில் உடைகள் வைப்போம். அது கூட நகை பணம் வைக்கக் கூடாது.
  • வடக்கு, கிழக்கு பார்த்து வைத்த பீரோவில் வைத்து நகை பணம் வைக்கலாம். வடக்கு மத்தி சரியான இடம். இந்த பகுதியில பீரோ வைத்து நகை, பணம் வைக்கலாம். நகை வைக்கும் பெட்டி வைக்கலாம். திரும்ப திரும்ப பணம் வரும்.
  • வடக்கு திசையில் நடு பகுதியில் வடக்கு பார்த்து பீரோ வைக்கவும். வருமானம் அதிகம் இருக்கும். தெற்கு பார்த்த வீடு. கிழக்கை ஒட்டிய வடக்கு பகுதியில் வைக்கலாம்.
  • தென் மேற்கு பீரோ வைக்க சொல்வார்கள். அது ஸ்டோர் ரூம். அதிர்ஷ்டம் தரக்கூடியது வடக்குதான்.
  • மேற்கு பார்த்த வீடு, கிழக்கு பார்த்த வீடு இது சரியாக இருக்கும். கிழக்கு ஒட்டிய பகுதியில் பீரோ வைக்கலாம்.
  • குபேரன் வடக்கில் இருந்து பார்வையிடுவார். அதனால் இந்த இடத்தில் பீரோ வைத்து பணம் வைத்தால் செல்வம் பெருகும்.
  • வடக்கு நோக்கி பீரோ வைத்தால் குபேரன் பார்வை கிடைக்கும் எதிர்பாராத அளவிற்கு பணம் நகை கிடைக்கும். குபேர மூலை முக்கியமானது.
  • பீரோவிற்குள் தங்க தகடு சேர்த்த பிரமீடு, வெள்ளியில் செய்த பிரமீடு, புதன்கிழமை வியாழன் வெள்ளி கிழமைகளில் பீரோவிற்குள் வைக்கலாம்.
  • நிறைய அதிர்ஷ்டத்தை தரும் நல்ல சத்தியை தரும். லட்சுமி படம் போட்ட தங்க நாணயங்களை வைக்கலாம்.
  • பணம் பெருகும். குபேர சிலையை பணப்பெட்டிக்குள் வைக்கலாம். அப்படி வைத்தால் பணம் வரும்.
பணம் வைக்கக்கூடாத இடம்

தெற்கு பகுதியில் பீரோ வைக்கலாம் பணம் சேரும். அது தவிர சமையல் செய்யும் அக்னி மூலையில் கஜானா வைத்தால் பணம் எரிந்து போகும்.

செலவு அதிகம் வரும். சமையல் அறைக்குள் பூஜை ரூம் வைக்கக் கூடாது. வடமேற்கு பகுதியில் பீரோ வைக்கக் கூடாது பணம் காற்று போல போய்விடும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்