வாஸ்து படி உங்க சமையலறையை அமைத்தால் நேர்மறை எண்ணங்கள் வளருமாம்! உடனே படியுங்க

Report Print Kavitha in வீடு - தோட்டம்

வீட்டின் அதிமுக்கிய அறை என்றால் அது சமையலறைதான் என்று பெண்கள் கூறுவதுண்டு.

சமையறைக்கு வாஸ்து பாக்க வேண்டியது ஓர் முக்கியமான செயல் ஒன்றாகும்.

அந்தவகையில் வாஸ்துப்படி சரியான முறையில் சமையலறையை அமைத்திருந்தால் தான் நேர்மறை எண்ணங்கள் வளரும் என்று கருதப்படுகின்றது.

தற்போது சமையறைக்கு தேவையான வாஸ்து குறிப்புகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • நெருப்பு என்பது வீட்டின் தென் கிழக்கு திசையில் இருப்பது ஐதீகம் என்பதால் சமையலறையை அந்த இடத்தில் அமைக்க வேண்டும்.
  • சமையலறையில் பூசப்படும் வண்ணமானது மஞ்சள், ரோஸ் , ஆரஞ்சு, சிவப்பு அல்லது கருஞ்சிவப்பு நிறங்களாக இருக்க வேண்டும். சமையலறையில் கருப்பு நிறத்தைத் தவிர்க்கவும்.
  • எலக்ட்ரானிக் சாதனங்களை ( மைக்ரோவேவ், ஃபிரிஜ் , ஓவன் ) தென் கிழக்கு பகுதியில்தான் வைக்க வேண்டும். சிலிண்டரும் தென்கிழக்கு மூலையில்தான் வைக்க வேண்டும்.
  • தண்ணீர் தொட்டி, சிங்க், குடிநீர் அமைக்க முடிவு செய்தால் அதை வட கிழக்கு திசையில் அமைக்க வேண்டும். அதேசமயம் சமையல் எரிவாயுவுக்கும் தண்ணீர் தொட்டிக்கும் இடைவெளி விட்டு அமைக்க வேண்டும்.
  • கிழக்கு திசை நோக்கிதான் ஜன்னல் பொருத்த வேண்டும். சிறிய ஜன்னல் பொருத்துவதாக இருப்பின் தென் திசையில் பொருத்தலாம்.
  • சாப்பாடு மேசை சமையலறையில் நடுப் பகுதியில் வைப்பதை தவிர்க்கவும். அதற்கு பதிலாக வட கிழக்குப் பகுதியில் வைப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களின் உடல் ஆரோக்கியம் காக்கப்படும்.
  • மளிகை சாமான், காய்கறி என சமையலறைப் பொருட்களை தேக்கி வைக்கும் இடம் , அலமாறி , ஸ்டோரேஜ் ராக் சமையலறை சுவற்றின் தெற்கு மற்றும் மேற்கு நோக்கி இருக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு நோக்கிய சுவர்களில் பொருத்துவதை தவிர்த்தல் நல்லது.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்