இந்த பொருட்களை மட்டும் மற்றவர்களுக்கு தானமாக கொடுத்து விடாதீங்க...பெருந்துயரத்தை ஏற்படுத்துமாம்!

Report Print Kavitha in வீடு - தோட்டம்
358Shares

சாஸ்திரங்களின் படி சில குறிப்பிட்ட பொருட்களை தானம் கொடுப்பது உங்கள் வாழ்வில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் அந்த பொருட்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • பிளாஸ்டிக் பொருட்களை ஒருபோதும் தானம் செய்யக்கூடாது. இது உங்கள் வாழ்வில் வறுமையையும், துயரத்தையும் ஏற்படுத்தும்.
  • துடைப்பத்தை மற்றவர்களுக்கு கொடுப்பது என்பது லக்ஷ்மி தேவியை உங்கள் வீட்டை விட்டு வெளியே அனுப்பும் செயலாகும். இதனை செய்தால் உங்கள் சேமிப்பு அனைத்தும் விரைவில் கரையும். உங்கள் வீட்டில் ஒருபோதும் பணம் தங்காது.
  • ஒருவருக்கு தானம் என்ற பெயரில் உங்களின் துணிகளை கொடுப்பது என்பது தவறான செயலாகும். நீங்கள் செய்த நல்ல செயல்களால் கிடைக்கும் புண்ணியங்கள் கூட பழைய துணிகளை மற்றவர்களுக்கு கொடுப்பதன் மூலம் பாவங்களாக மாறக்கூடும்.
  • பயன்படுத்தப்பட்ட பழமையான எண்ணெயை தானமாக சனிபகவானின் சாபத்தை பெற்றுத்தரும்.
  • உணவு முற்றிலும் கெட்டு போகாவிட்டாலும் பழைய உணவுகளை தானமாக கொடுப்பது உங்கள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். மேலும் இது குடும்பத்தினரிடையே பல சிக்கல்களை உண்டாக்கலாம்.
  • கத்தரிக்கோல், கத்தி போன்ற கூரான பொருட்களை ஒருபோதும் தானமாக கொடுக்காதீர்கள். இவ்வாறு செய்வது உங்கள் வீட்டில் பல கஷ்டங்களை ஏற்படுத்தும், மேலும் உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களுக்கு துரோகம் செய்யும் வாய்ப்புகள் அதிகம்.
  • கிழிந்த புத்தகங்கள், உடைந்த பேனா போன்றவற்றை ஒருபோதும் தானமாக கொடுக்காதீர்கள். இது உங்கள் வாழ்வில் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்.
  • உங்களுக்கு தேவைப்படாத பொருட்கள் என்று நினைக்கும் எதையும் தானம் செய்யாதீர்கள். மற்றவர்களுக்கு தேவைப்படுவது எதுவோ அதனை தானம் செய்யுங்கள்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்