வாஸ்துப்படி உங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் கடிகாரத்தை மாட்டிவிடாதீர்கள்....கெட்ட சகுனம் ஏற்படுமாம்!

Report Print Kavitha in வீடு - தோட்டம்

வாஸ்து சாஸ்திரத்தின் படி நீங்கள் வீட்டில் கடிகாரம் மாட்டும் திசை உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை உண்டாக்கலாம்.

அந்தவகையில் உங்கள் வீட்டில் எந்தெந்த திசைகளில் கடிகாரம் மாட்ட வேண்டும், எந்த திசையில் மாட்ட கூடாது என்பதை பார்ப்போம்.

  • வாஸ்து படி தெற்கு திசை எதிர்மறை ஆற்றல்கள் அதிகமிருக்கும் திசையாகும். எனவே கட்டிடத்தின் தெற்கு திசை சுவரில் ஒருபோதும் கடிகாரத்தை மாட்டக்கூடாது.
  • கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு ஆகிய மூன்று திசைகளிலுமே கடிகாரத்தை மாட்டலாம். இதனால் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.
  • வாஸ்து சாஸ்திரத்தின் படி பெண்டுலம் இருக்கும் கடிகாரம் வீட்டில் மாட்டுவது மிகவும் நல்லது. ஏனெனில் இது ஏற்படுத்தும் ஒலி அதிர்வுகள் உங்கள் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
  • வாசலின் மேல் எப்பொழுதும் கடிகாரத்தை மாட்டக்கூடாது. அதேசமயம் வாசற்கதவை பார்க்கும் படியும் கடிகாரத்தை மாட்டக்கூடாது. இதனால் உங்கள் வீட்டிற்குள் நுழையும் நேரமாய் ஆற்றல்கள் திரும்பி செல்ல வாய்ப்புள்ளது.
  • உங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கவும், தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை நிலவவும் கடிகாரத்தை படுக்கையறையிலிருந்து தூரமாக மாட்டி வைக்கவும். இது தம்பதிகளிடையே நெருக்கத்தை அதிகரிக்கும்.
  • உங்கள் வீட்டு கடிகாரம் ஓடாமல் இருந்தாலோ அல்லது கடிகாரத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலோ உடனடியாக அதனை அங்கிருந்து எடுத்துவிட வேண்டும். கடிகாரத்தை சரிசெய்த பிறகே மீண்டும் அதனை மாட்ட வேண்டும். ஓடாத கடிகாரத்தை வீட்டில் கெட்ட சகுனமாகும்.
  • படுக்கையறை என்று வரும்போது அங்கு கடிகாரத்தை கிழக்கு திசையில் மாட்டுவது நல்லது. அதேசமயம் கிழக்கு திசையில் கடிகாரத்தை மாட்ட முடியவில்லை எனில் வடக்கு திசையில் மாட்டலாம். இது நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்