நீங்கள் சாலையில் நடக்கும் போது இந்த பொருட்கள் எல்லாம் பார்த்தால் மிதித்து விடாதீங்க... துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்!

Report Print Kavitha in வீடு - தோட்டம்
367Shares

சாலையில் இருக்கும் சில பொருள்களை கடந்து செல்வதும், தாண்டி செல்வதும் நமது வாழ்வில் துரதிர்ஷ்டத்தையும், துன்பத்தையும் உண்டாக்கும் என்று சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் சாலையில் நடக்கும் போது எந்தெந்த பொருட்களை எல்லாம் நாம் மிதித்து விட கூடாது என்று இங்கு பார்ப்போம்.

  • வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அசுத்தமான நீரை தாண்டி செல்வது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். இந்த நீரின் மீது ஒருபோதும் காலை வைக்காதீர்கள்.
  • மிருகங்கள் அல்லது பறவைகளின் இறந்த உடல்களை தாண்டி செல்வது உங்கள் வாழ்க்கையில் பெரிய துன்பங்களை ஏற்படுத்தும். எனவே ஒருபோதும் இறந்த உடல்களை தாண்டியோ, மிதித்தோ செல்லாதீர்கள்.
  • தலைமுடியினை தாண்டியோ அல்லது மிதித்தோ செல்ல வேண்டாம். இது உங்கள் உடலுக்குள் எதிர்மறை சக்திகளை கொண்டுவரும். முடியை பார்த்தால் உடனடியாக அதனை சுத்தம் செய்து விடுவது நல்லது.
  • யாகம் மற்றும் பூஜை பொருட்களை மிதிக்க நேர்ந்தால் அது உங்கள் வாழ்வில் பாவங்களை அதிகரிக்கும்.
  • ஒருவேளை அதில் சாமிக்கயிறு அல்லது வேறு புனித நூல்கள் கிடந்தால் அவற்றை தாண்டி செல்லக்கூடாது. சாலையில் கிடக்கும் புனித நூல்களை காலால் மிதிப்பது பாவமாகும்.
  • பணமோ, நாணயமோ சாலையில் கிடந்தால் அதனை எடுக்கக்கூடாது. அதேசமயம் அதனை தாண்டியோ, மிதித்தோ செல்லக்கூடாது. ஏனெனில் இது லட்சுமி தேவியை அவமதிக்கும் செயலாகும். இவ்வாறு செய்வது உங்கள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துவதோடு கடுமையான பணக்கஷ்டத்தையும் ஏற்படுத்தும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்