வாஸ்துப்படி இந்த ஓவியங்களை மட்டும் மாட்டுங்க... உங்கள் வீட்டிற்குள் நேர்மறை சக்திகளை அழைத்துவருமாம்!

Report Print Kavitha in வீடு - தோட்டம்

நமது வாழ்க்கையில் வாஸ்து ஒரு முக்கிய பகுதியாகவே இருக்கின்றது.

வாஸ்துப்படி நேர்மறை தாக்கமா அல்லது எதிர்மறை தாக்கமா என்பதை நீங்கள் மாட்டும் ஓவியங்களே நிர்ணயிக்கும்.

அந்தவகையில் நமது வீட்டிற்குள் நேர்மறை சக்திகளை அழைத்து வரும் ஒவியங்கள் என்ன என்ன என்பதை பாரப்போம்.

  • தம்பதிகளுக்கிடையே தொடர்ந்து பிரச்சினை எழுந்தால் அவர்கள் அறையில் காதல் பறவைகளின் ஓவியத்தையோ அல்லது காதல் ஜோடிகளின் ஓவியத்தையோ மாட்டிவைக்கவும்.
  • நதி ஓடுவது போலவோ அல்லது மீன்கள் நீந்துவது போலவோ இருக்கும் ஓவியங்களை உங்கள் வீட்டின் மகிழ்ச்சியான இடத்தில் மாட்டுவது உங்கள் வாழ்வில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும். அது போன்ற ஓவியத்தை உங்கள் வீட்டின் முக்கிய பகுதியிலோ அல்லது பணம் வைக்கும் இடத்திலோ மாட்டி வையுங்கள்.
  • உங்கள் வீட்டின் அதிர்ஷ்டமான இடம் எப்பொழுதும் காற்றால் ஆதிக்கம் செலுத்தப்படும் இடமாக இருக்கும். அந்த இடத்தில் பறவைகள் பறப்பது போலவோ நன்கு வளர்ந்த மரங்கள் அல்லது பூக்கள் நிறைந்த செடிகள் போன்றவற்றை உங்கள் வீட்டில் மாட்டி வையுங்கள். இது உங்களுக்கு பொருளாதாரரீதியாக தன்னிறைவை வழங்கும்.
  • உங்களின் நீண்ட நாள் ஆசைகள் அல்லது கனவு நிறைவேற உங்களின் ஆசையை உணர்த்தும் ஓவியத்தை உங்கள் வீட்டின் விரும்பும் திசையில் மாட்டி வைக்கவும். இது உங்களின் ஆசையை விரைவில் நிறைவேற்ற உதவும்.
  • கோபமாக இருக்கும் ஆண் அல்லது பெண் கடவுளின் ஓவியங்களை உங்கள் வீட்டில் மாட்டுவதை தவிர்க்கவும். ஏனெனில் இது வீட்டில் அனைவரிடமும் கோபத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும். அமைதியான கடவுள்களின் ஓவியத்தை மட்டும் வீட்டில் வைக்கவும்.
  • குழந்தைகள் அறையில் எப்பொழுதும் ஓடும் குதிரை, அருவி மற்றும் மலைகள் போன்ற ஓவியங்களை மாட்டி வைக்கவும். இது அவர்களின் கவனிக்கும் திறனை அதிகரித்து அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க உதவும்.
  • உங்கள் வீட்டிற்கு எப்பொழுதும் மென்மையான வண்ணத்திலேயே பெயிண்ட் அடிக்கவும். இது உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியையும், அமைதியையும் நிலைகொள்ள செய்யும். பிரகாசமான அல்லது ருத்ரத்தை பிரதிபலிக்கும் நிறத்தில் பெயிண்ட் அடிப்பதை தவிர்க்கவும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்