வீட்டில் லட்சுமி குடிகொள்ள கடைபிடிக்க வேண்டிய சில வாஸ்து சாஸ்திரங்கள்

Report Print Jayapradha in வீடு - தோட்டம்

நாம் புதிதாக வீடு கட்டும் போது நமக்கு நன்மை தரக் கூடிய ஒருசில வாஸ்து சாஸ்திரங்களை கண்டிப்பாக தெரிந்துக் கொள்ளுங்கள்.

வீடு கட்டுவதற்கான வாஸ்து சாஸ்திரங்கள்
 • வீடு கட்டுவதற்கு மனை வாங்கும் போது அந்த நிலம் சதுரம் அல்லது செவ்வகம் வடிவில் இருக்க வேண்டும்.
 • வீடு கட்டும் போது, கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் அதிக அளவு காலி இடத்தை விட்டு கட்ட வேண்டும்.
 • வடக்கு பகுதியில் மட்டும் அதிக பள்ளம் இல்லாமல் கட்ட வேண்டும். ஏனெனில் அங்கு நீர் சேமிக்கும் தொட்டியை வைக்க வேண்டும்.
 • வீட்டின் தெற்கு பகுதியில், சற்று மேடாகவும், அதிக எடை ஏற்றாமல் இருக்க வேண்டும். மேலும் மாடி படிக்கட்டு போன்ற எடை ஏற்றும் கட்டுமானம் தெற்கு பகுதியில் வைப்பது மிகவும் நல்லது.
 • வீட்டிற்கு அருகில் குழாய் கிணறு வடக்கு அல்லது கிழக்கு பகுதியில் வைக்க வேண்டும்.
 • சமையல் அறையானது அக்னி மூலையான தென் கிழக்கு பகுதியில் அமைக்க வேண்டும்.
 • நாம் கட்டும் வீட்டில் படுக்கை அறையானது தென் மேற்கு திசையில் அமைக்க வேண்டும்.
 • கழிப்பறை மற்றும் குளியலறைகள் வட மேற்கில் வாயு மூலையை நோக்கி வர வேண்டும்.
 • வீட்டை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். மேலும் பிரதான நுழை வாசல் கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி இருத்தல் வேண்டும்.
 • ஒவ்வொரு அறையில் இருக்கும் நுழையும் வாசல் கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்குமாறு அமைக்க வேண்டும்.
 • வீட்டின் அருகில் கோவில், இடுகாடு அல்லது மின்மாற்றி போன்றவை வீட்டின் மிக அருகாமையில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்