வீட்டில் வறுமை நீங்கி செல்வம் கொழிக்க வேண்டுமா? அப்போ இதையெல்லாம் தூக்கியெறிங்க

Report Print Jayapradha in வீடு - தோட்டம்

வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டின் வறுமை நீங்கி செல்வம் கொழிக்க வேண்டுமானால் வீட்டினுள் ஒருசில பொருட்களை வைத்திருக்கக் கூடாது. ஏனெனில் அவை வீட்டில் செல்வத்தை தங்கவிடாமல் தடுக்குமாம்.

எனவே வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமானால் எவற்றையெல்லாம் வீட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது

புறா கூடு

வீட்டில் புறா கூடு இருந்தால் அது வீட்டின் வறுமையை அதிகரித்து, உறுதியற்ற நிலையை ஏற்படுத்தும். எனவே வீட்டினுள் இருக்கும் புறா கூட்டினை வெளியேற்றுங்கள்.

தேன் கூடு

வீட்டினுள் தேன் கூடு இருந்தால் வறுமை மற்றும் துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும். வீட்டில் தேன் கூடு இருப்பின் உடனே அதனை வெளியேற்றுங்கள்.

சிலந்தி வலை

வீட்டில் சிலந்தி வலை இருப்பது என்பது வாழ்வில் பல இன்னல்களை தரும் செயல்களை தரும். எனவே வீட்டில் சிலந்து வலையைக் கண்டால் உடனே அதை சுத்தம் செய்துவிடுங்கள்.

உடைந்த கண்ணாடி

உடைந்த கண்ணாடிகளை வீட்டில் வைத்திருப்பது என்பது வீட்டில் வறுமையை அதிகரித்து எதிர்மறை ஆற்றல்களை ஈர்ப்பதாக கருதப்படுகிறது.

வௌவால்

வௌவால் உடல்நல பிரச்சனை, மோசமான சம்பவங்கள், வறுமை அல்லது இறப்பைக் குறிப்பதாக கருதப்படும் ஒன்று. எனவே மாலை நேரத்திற்கு பின் வீட்டின் ஜன்னல் கதவுகளை அடைத்துவிடுங்கள்.

வீட்டு சுவர்களில் விரிசல்

உங்கள் வீட்டின் சுவர்களில் விரிசல் இருந்தால் அவை அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்திற்கு இடையூறை ஏற்படுத்தி வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும்.

ஒழுகும் குழாய்

வீட்டினுள் இருக்கும் குழாயில் இருந்து எப்போதும் நீர் வடிந்து கொண்டிருந்தால் நீர் மட்டும் வீணாவதில்லை வீட்டின் நேர்மறை ஆற்றல்களும் வெளியேறிக் கொண்டிருக்கின்றன என்று அர்த்தம்.

காய்ந்த மலர்கள்

பூஜை அறையில் சாமிக்கு அலங்கரிக்கும் பூக்கள் காய்ந்து பல நாட்களாக பூஜை அறையில் இருப்பது வீட்டின் செல்வ வளத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். எனவே தினமும் தவறாமல் பூஜை அறையை சுத்தம் செய்யுங்கள்.

காய்ந்த இலைகள்

வீட்டினுள் அலங்கார செடிகள் வைத்து வளர்த்து வருபவர்கள் தினமும் அதை பராமரித்து வாருங்கள். ஏனெனில் வீட்டினுள் காய்ந்த இலைகள் இருந்தால் அது எதிர்மறை ஆற்றல்களை ஈர்த்து, நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்