உடல் உஷ்ணத்தால் ஏற்படும் மோசமான பாதிப்புகள் பற்றி தெரியுமா? உடலை குளிர்ச்சியாக்க இதை மட்டும் செய்யுங்க போதும்

Report Print Raju Raju in ஆரோக்கியம்

உடல் உஷ்ணம் என்பது பலரும் சந்திக்கும் பிரச்சினையாக உள்ளது. இதன் காரணமாக உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

கண் எரிச்சல், தூக்கமின்மை, வாய்ப்புண், மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், தூக்கமின்மை, வயிற்று எரிச்சல், சிறுநீரக எரிச்சல், கண் எரிச்சல், மூலநோய், மலக்குடல் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதோடு கல்லீரல், பித்தப்பை பாதிப்பு கூட உடல் சூட்டால் ஏற்படுகிறது.

இப்படியான உடல் உஷ்ணத்தை சில எளிய இயற்கையான வழிகள் மூலம் குறைத்து உடலை குளிர்ச்சியாக மாற்றி கொள்ள முடியும்.

தண்ணீர்

உடல் சூட்டுக்கு சிறந்த நிவாரணி தண்ணீர் தான், கோடைக்காலத்தில் வழக்கமாக குடிக்கும் நீரின் அளவை விட, சற்று அதிகமாக அதுவும் அடிக்கடி நீரைக் குடித்து வந்தால், உடலினுள் உள்ள வெப்பநிலை குறைந்துவிடும்.

ஆப்ரிகாட்

ஒரு டம்ளர் ஆப்ரிகாட் ஜூஸ் உடன் தேன் கலந்து குடித்து வந்தால், உடல் சூடு தணிவதோடு, அதிகப்படியான தாகமும் அடங்கும்.

குளிர்ச்சியான பால்

வெயில் காலத்தில் பச்சை பாலை ஃப்ரிட்ஜில் வைத்து, தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் குறைந்துவிடும். உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த முறையை கட்டாயம் தினமும் பின்பற்றினால், விரைவில் நல்ல மாற்றம் கிடைக்கும், அதே நேரம் மிகவும் குளிர்ச்சியாகவும் இருக்கக்கூடாது.

சோம்பு

சோம்பு மிகவும் நறுமணமிக்க மற்றும் நல்ல சுவையுடைய மசாலாப் பொருள். இந்த சோம்பை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டி குடியுங்கள். இப்படி தினமும், அதுவும் கோடைக்காலத்தில் குடித்து வந்தால், உடல் சூடு பிடிப்பதைத் தடுக்கலாம்.

இளநீர்

நம் அனைவருக்குமே உடல் சூடு என்றதும் குடிக்கத் தோன்றும் ஓர் பானம் இளநீர். இந்த இளநீர் ஒருவரது உடல் சூட்டைத் தணிப்பதோடு, உடலை வறட்சி அடையாமலும் தடுக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்