தப்பித்தவறி கூட இதையெல்லாம் அதிகமா சாப்பிடாதீங்க!

Report Print Nalini in ஆரோக்கியம்
520Shares

எந்தவொரு உணவையும் அளவோடு சாப்பிட்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்ன்னு பெரியோர்கள் சும்மாவா சொல்லியிருக்கிறார்கள். சிலர் ஆசைப்பட்டு அதிகளவில் சாப்பிட்டு பின்னர் அவஸ்திபடுவார்கள்.

அப்படி உணவுப் பொருட்களை அதிகளவில் எடுத்துக் கொண்டால் என்னமாதிரியான பின் விளைவுகள் வரும் என்பதை பார்ப்போம்

  • பச்சரிசி அதிகமா சாப்பிட்டா இரத்த சோகை நோய் ஏற்படும்.
  • அச்சுவெல்லம் அதிகமாக சாப்பிட்டால் அஜீரணம் உண்டாகும்.
  • பலகாரம் அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலி வரும்.
  • இஞ்சி அதிகமா சாப்பிட்டால் மென் குரலும் இறுக்கமாகும்.
  • பழைய சோறு, கஞ்சி அதிகமாக சாப்பிட்டால் வாய்வு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால் வலிக்கும்.
  • தேங்காய் அதிகமாக சாப்பிட்டால் சளி, பித்தம், வறட்டு இருமல் வரும்.
  • மாங்காய் அதிகமாக சாப்பிட்டால் வயிறு கட்டும், சளி வளரும், இடுப்புவலி வரும், பித்தம் அதிகமாகும்.
  • கோதுமையை பித்த உடம்புள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டால் வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் ஏற்படும்.
  • பாதாம் பருப்பு அதிகமாக சாப்பிட்டால் வாய் சுவை மாறும், பித்தம் அதிகமாகும், வயிறு மந்தம் ஏற்படும்.
  • முற்றிய முருங்கை அதிகம் சாப்பிட்டால் வாய்வு, சளி வரும்.
  • எருமைப்பால் அதிகம் குடித்தால் கிட்னி கல், அறிவு மங்கும்.
  • மிளகு அதிகமாக உடம்பில் சக்தி இல்லாதவர்கள் அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.
  • மிளகாய் அதிகம் சாப்பிட்டால் வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.
  • காபி அதிகமாக சாப்பிட்டால் கை நடுங்கும், பித்தம் அதிகமாகும், கண் எரியும், நெஞ்சு உலரும், ஆண்மை கெடும்.
  • டீ அதிகமாக சாப்பிட்டால் உடல் நடுங்கும், கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும்.
  • எலுமிச்சை அதிகமாக சாப்பிட்டால் பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும்.
  • எள்ளு அதிகமாக சாப்பிட்டால் பித்தம், செரியாமை உண்டாகும்.
  • உப்பு அதிகமாக சாப்பிட்டால் எலும்பு உருக்கும், விந்தை குறைக்கும்
  • வெங்காயம் அதிகமாக சாப்பிட்டால் தலைவலிக்கும், சளி பெருகும்.
  • குங்குமப்பூ அதிகமாக சாப்பிட்டால் மதியழிக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தையின் உறுப்புகளை கோணலாக்கும்.
  • வெள்ளைப் பூண்டு அதிகமாக சாப்பிட்டால் ரத்தம் கொதித்து பொங்கும், கரு அழிக்கும், குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்