நீர்க்கடுப்புக்கு வீட்டு வைத்தியம்

Report Print Nalini in ஆரோக்கியம்
479Shares

உடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் வீக்கமடைந்து எரிச்சலுக்கு ஆளாவதைத்தான் நீர்க்கடுப்பு என்று சொல்லப்படுகிறது.

சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, அதிகம் தண்ணீர் அருந்தாது, பால்வினை நோய்கள், அடிபடுதல், கருத்தடைச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் போன்றவற்றால் ஒருவருக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.

ஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, சிறுநீர் மற்றும் விந்துடன் ரத்தம் கலந்து வெளியேறும்.

அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.

பெண்களுக்கு வயிற்றுவலி, சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, குளிர் மற்றும் காய்ச்சல்,அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு,பிறப்புறுப்புக் கசிவு போன்றவை நீர்க்கடுப்பில் காணப்படும்.

இப்படிப்பட்ட நீர்க்கடுப்புக்கு வீட்டு வைத்தியம் என்னவென்று பார்ப்போம்

  • கைப்பிடி உளுந்தை நீரில் ஊறவைத்து, மறுநாள் அதிகாலை நீரை வடித்து, அந்த நீரை அரை டம்ளர் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு சரியாகும்.
  • கற்பாசியை அரைத்து இடுப்புப் பகுதியிலும், அடிவயிற்றிலும் பூசி வந்தால் நீர்க்கடுப்பு குணமாகும்.
  • சிறு துண்டு கற்றாழையை நன்றாகக் கழுவி, வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு சரியாகும்.
  • கால் டம்ளர் பருப்புக் கீரையின் சாற்றை இரண்டு வேளை அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு குணமாகும்.
  • அரை ஸ்பூன் முள்ளிக்கீரை வேர்ப்பொடியை நீர் கலந்து சாப்பிட்டால் நீர்க்கடுப்பு குணமாகும்.
  • சரக்கொன்றை புளியுடன் கடுகுரோகிணி, சுக்கு, வாய்விடங்கம், பெருங்காயம், படிகாரம்,பொட்டிலுப்பு கூகைநீறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து அடிவயிற்றில் பற்றுப் போட்டால் நீர்க்கடுப்பு குணமாகும்.
  • செண்பகப் பூவுடன் பத்து மடங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி, அதில் அரை டம்ளர் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு சரியாகும்.
  • கைப்பிடியளவு சுரைக்கொடியை தண்ணீர் விட்டுக் காய்ச்சி, வடித்து வெண்ணெய் கலந்து அருந்தி வந்தால் சரியாகும்.
  • சதாவேரிக் கிழங்கின் பொடி அரைஸ்பூன் வெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு சரியாகும்.
  • துத்தி வேர்ப்பொடியை அரை ஸ்பூனை திராட்சைப் பழச்சாற்றில் கலந்து சாப்பிட்டால் நீர்க்கடுப்பு சரியாகும்.
  • அரை ஸ்பூன் தேற்றான் விதைப்பொடி எடுத்து எலுமிச்சைச் சாறு, நீர் சேர்த்து சாப்பிட்டால் நீர்க்கடுப்பு குணமாகும்.

நீர்க்கடுப்பு ஏற்பட்டிருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

  • திராட்சை, எலுமிச்சை, அன்னாசி, வெங்காயம்,உருளைக்கிழங்கு முள்ளங்கி, பூசணி, வெள்ளரி. துவர்ப்பு மற்றும் கார உணவுகள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்