சர்க்கரை நோய், மலச்சிக்கல்!... எண்ணற்ற நோய்களுக்கு மருந்தாகும் முருங்கை

Report Print Gokulan Gokulan in ஆரோக்கியம்

செறிமந்தம் வெப்பந் தெறிக்குந் தலைநோய்
வெறிமூர்ச்சை கண்ணோய் விலகும் மறமே
நெருங்கையிலை யொத்தவிழி நோழையே!

என முருங்கை இலையின் பெருமையை சித்தர் அகத்தியர் தன் பாடலில் கூறியுள்ளார்.

பல பிரமிப்பான நன்மைகளைத் தரும் பிரமாதமான இந்த பிரம்ம விருட்சம் மரம் நாடெங்கும் மக்களுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.

முருங்கைமரத்தின் இருக்கும் மகிமை யாரும் கண்டுகொள்வதில்லை. தான் வலுவிழந்தாலும் பரவாயில்லை. தன்னை வளர்ப்பவர்; வலுவோடும் நல்ல உடல் திறனோடும் வாழவேண்டும் என்று நினைப்பவைதான் இந்த முருங்கை மரங்கள்.

வீட்டுக்கு முன்னால் வைத்தால் முனி வரும் பின்னால் வைத்தால் பேய் வரும் என்று இன்றும் கிராமப்புறங்களில் முருங்கை மரங்களைப் பற்றி கூறுவதும் உண்டு. இதனால் சில பேர் முருங்கை மரத்தை வெட்டிவிடுவார்கள்.

முருங்கை மரத்தில் இலை, பூ, காய் என எல்லாம் மருத்துவ குணம் கொண்டது. அதிக உயிர்சத்துகளை கொண்டதாகவும் உள்ளது. முருங்கைக்காய் சாம்பார், கீரை தொவட்டல் என பல வகையில் முருங்கையை பயன்படுத்தலாம்ம.

முருங்கையில் நிறைய இரும்புச்சத்து உள்ளது. முருங்கை முந்நூறு நோய்களை விரட்டும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. முருங்கை கீரையில் வைட்டமின் ‘ஏ’ பாலில் உள்ளதைவிட நான்கு மடங்கு அதிக கால்சியம் உள்ளது.

முருங்கையில் நாட்டு முருங்கை, செடிமுருங்கை என இரண்டு வகைகள் உள்ளன. இதில், நாட்டுமுருங்கையில் மருத்துவக் குணமும், சுவையும் அதிகமாக இருக்கும்.

செடிமுருங்கையில் காய்கள் சற்று திடமாக இருந்தாலும், சற்றே சலசலப்புடன் இருக்கும். செடிமுருங்கையின் ஆயுள் இரண்டு ஆண்டுகள். ஆனால் நாட்டு முருங்கையின் ஆயுள் அதிகபட்சம் 50 ஆண்டுகள் வரை இருக்கக்கூடியது.

செடிமுருங்கை விதை மூலம் வளர்க்கப்படுகிறது. ஆனால் நாட்டுமுருங்கை நாற்றுகள், (விதை குச்சிகள்) மூலமும் நடவு செய்யப்படுகின்றன.

  • ஜீரணக்கோளாறுகள், மந்தநோய், உடல்சூடு போன்றவை முருங்கை கீரை குணப்படுத்துகிறது.
  • உஷ்ணத்தால் ஏற்படும் தலைவலி, மயக்கம், கண்நோயும் விலகும் போன்றவற்றையும் சரி செய்கிறது.
  • முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து சூப்வைத்து சாப்பிட்டால் ஆஸ்துமா, சுவாசக் கோளாறு பிரச்சினைகள் சரியாகும்.
  • பெண்கள் முருங்கை கீரையை வேர்க்கடலையுடன் சேர்த்து சாப்பிட்டு வர கருப்பை சம்பந்தமான பிரச்சினை குணமாகும்.
  • வைட்டமின் ஏ சத்து நிரம்பி இருப்பதால் ஒளிபடைத்த கண்கள் இருக்கும்.
  • முருங்கை இலை மனித உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகப்படுத்தி ரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு போன்றவற்றை விரட்டி அடிக்க உதவியாக இருகிறது.
  • முருங்கை இலை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
  • முருங்கை இலை ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
  • ஆண் மற்றும் பெண்களுக்கு உள்ள மலட்டுத் தன்மையை முருங்கை கீரை குணப்படுத்துகிறது.
  • எப்போதும் இளமைப் பொலிவு இருக்க முருங்கை முக்கியத்துவம் பெறுகிறது.
  • பச்சையான முருங்கை இலைச்சாறு ஒரு டம்ளர் எடுத்துக்கொண்டு அதில் பாதி எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட உடல் தொப்பை மறைந்து நல்ல உடலழகு கிடைக்கும்.
  • சிறிதளவு முருங்கை இலைச்சாறுடன் உப்புக்கரைசல் சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் சரியாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்