குடற்புண்களால் அவஸ்தையா? இதோ இந்த அற்புத கசாயம் குடித்து பாருங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

குடற்புண் (Peptic ulcer) அல்லது வயிற்றுப்புண் என்பது இரைப்பை உணவுக்குழாய் பாதையில் ஏற்படும் சீழ்ப்புண் ஆகும். இது பொதுவாக அமிலத்தன்மையுடையது.

இந்நோய், வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கக்கூடியது. இதனால், அடிக்கடி வயிற்று வலி, அஜீரணக்கோளாறு, சாப்பிட முடியாத பிரச்சனை ஏற்படும்.

நேரம் தவறி உண்பதாலும், தொடர்ந்து அதிக காரமான உணவுகளை உண்பதாலும் வயிற்றுப்புண் வரக்கூடும்.

மேலும் குடற்புண்களை இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் கஷாயங்கள் மூலம் கூட இதனை எளிய முறையில் தடுக்க முடியும்.

அந்தவகையில் தற்போது குடற்புண்களுக்கு தீர்வு தரும் கஷாயம் ஒன்றினை பற்றி இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • வெந்தயக் கீரை - ஒரு கையளவு
  • கருப்பு உளுந்து - 10 கிராம்
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
செய்முறை

வெந்தயக் கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். உளுந்தை லேசாக வறுத்து நன்கு உடைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள வெந்தயக் கீரை மற்றும் உடைத்த உளுந்து மற்றும் சிறிதளவு மஞ்சள்தூளையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்தப் பின்பு நீரை 100 மி.லி அளவாக சுண்டவைத்து இறக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு குடிக்கவும்.

பயன்கள்

குடற்புண்களால் சிரமப்படுபவர்கள் இந்த வெந்தயக் கீரை உளுந்து கசாயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம் குடற்பகுதியில் உண்டாகும் புண்களை குணமாக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்