கடுமையான காது வலியால் அவதியா? இதோ எளிய வீட்டு வைத்திய முறைகள்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

காதுவலி நாம் இன்றைய காலத்தில் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று.

அடிக்கடி ஏற்படக்கூடிய காது வலி என்பது சைனஸ் தொற்று, டான்சில்லிடிஸ், துவாரங்கள் போன்ற பிரச்சனைகளில் வெளிப்பாடாக கூட இருக்கலாம்.

அதுமட்டுமின்றி காது வலி பெரும்பாலும் அழற்சி, தொற்று மற்றும் அதிக இரைச்சல் போன்றவற்றால் ஏற்படும்.

இப்படி வலி ஏற்பட்டால் உடனே நாம் காதுக்குள் எதையாவது கொண்டு நுழைக்க கூடாது. இதனால் உங்கள் காதில் உள்ள மெல்லிய சவ்வுகள் பாதிப்படையலாம்.

அந்தவகையில் இதற்கு மாறாக சில கை வைத்திய முறைகள் பின்பற்றினால் எளிதில் காதுவலியில் இருந்து விடுபட முடியும். தற்போது அந்த கை வைத்தியங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

shamimsalamati
  • பூண்டு பற்களை தட்டி ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 3-4 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றி அதில், தட்டி வைத்துள்ள பூண்டை சேர்த்து எண்ணெயை ஆற வைக்கவும். தயாரித்து வைத்துள்ள பூண்டு எண்ணெயை 2-3 சொட்டுகள் வலி இருக்கும் காதில் தொடர்ந்து ஊற்றி வந்தால், காது வலி குணமாகும்.
  • சிறிது இஞ்சியில் சாறு எடுத்து, அதனை 2-3 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில் சேர்க்கவும். இதனை நன்கு கலந்து 3-4 சொட்டுக்கள் வலி இருக்கும் காதில், வலி போகும் வரை தொடர்ந்து ஊற்றி வரவும்.
  • சிறிது ஆலிவ் ஆயிலை மிதமாக சூடேற்றி, அதனுடன், 2-3 சொட்டுக்கள் டீ ட்ரீ ஆயிரை சேர்க்கவும். இந்த எண்ணெய் கலவையை நன்கு ஆற விடவும். பின்பு, 3-4 சொட்டு எண்ணெயை வலி இருக்கும் காதில் தொடர்ந்து ஊற்றி வலி இல்லாமல் போகும்.
  • மா இலைகள் சிலவற்றை எடுத்து நன்கு கசக்கி, சாறு எடுத்துக் கொள்ளவும். வலி இருக்கும் காதில் மா இலையின் சாற்றை ஊற்றுவதற்கு முன்பு சிறிது மிதமான சூடேற்றி கொள்ளவும்.
  • காது வலி இருக்கும் போது, துளசி டீ அல்லது கெமோமில் டீ குடித்தால், வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
  • 12 மணி நேர இடைவேளையில், தொடர்ந்து ஆப்பிள் சிடர் வினிகரை 3-4 சொட்டுகள் வலி இருக்கும் காதில் ஊற்றி வரவும். இது காது வலிக்கு சிறந்த அருமருந்தாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்