உங்க உடம்பில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கா? இதனை குறைக்க இதோ சூப்பர் டிப்ஸ்!

Report Print Kavitha in ஆரோக்கியம்
747Shares

சிறுவயதிலிருந்தே கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை உண்டவர்களுக்கு ஐம்பது அறுபதில் வரவேண்டிய இருதய நோய்கள் முப்பது வயதிலே வந்து பாடாய்படுத்துகின்றது.

இது ஒழுங்கற்ற வாழ்க்கைமுறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுமுறை ஆகியவற்றினால் கெட்ட கொழுப்புகள் உடலில் தங்கி இறுதியில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாவதற்கு காரணமாகிவிடுகிறது..

இரத்தக் குழாய்கள் மற்றும் பிற உறுப்புகளில் படியும் கெட்ட கொழுப்புகள் இரத்த அழுத்தத்தை மிகைப்படுத்தி, இறுதியில் மாரடைப்பை உருவாக்கி இள வயதிலேயே இறப்பிற்கு வழிவகுக்கின்றன.

இதிலிருந்து விடுபட அடிக்கடி வைத்தியசாலைக்கு செல்வதை தவிர்த்து விட்டு இயற்கையாக கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வைத்து தீர்வு காண முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

hearthighway.
  • பூண்டை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு குறைந்துவிடும்.
  • நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுப் பொருட்ளான ஆப்பிள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை சேரவிடாமல் தடுக்கும்.
  • தினமும் காலை கற்றாழை ஜெல்லை எலுமிச்சை அளவு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடற்சூட்டுடன் கொழுப்பும் குறையும்.
  • கொள்ளுடன் சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்து 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும்.
  • கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்பு கரையும்
  • வாழைத்தண்டு சாறில் கரு மிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்து பொடிக்கி இதனை உணவில் மிளகிற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தினால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.
  • தண்ணீருடன் 20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக் கொழுப்பு தங்காது.
  • இஞ்சியின் தோலை சீவி, ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடித்து 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி குடிக்கவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்