பூண்டை இப்படி வறுத்து சாப்பிடுங்க... 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதம் நடக்குமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

நமது அன்றாட சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் பூண்டு.

பூண்டில் அலிசின், அலைல் ப்ரொபைல் டைசல்ஃபேட், சிஸ்டீன் சல்ஃபாக்சைடு ஆகியவை நிறைந்திருக்கிறது. இதில் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிபங்கல் தன்மையும் உள்ளது.

அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.

அதிலும் பூண்டை வறுத்து சாப்பிட்டால் இன்னும் பல பயன்களை அள்ளித்தருகின்றது.

ஏனெனில் பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும் என்று கூறப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது வறுத்த பூண்டை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.
  • பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.
  • உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.
  • பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்.
  • பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.
  • முதல் 1 மணிநேரத்தில் பூண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பிக்கும்.
  • கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும். தமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
  • இரத்த அழுத்தத்தை சீராக்கும். உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும்.
  • எலும்புகளின் வலிமை அதிகரிக்கும். அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும். உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...