சப்பாத்தி கள்ளி ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? உடனே படிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

வறண்ட இடங்களிலும் காடுகளிலும் வளரகூடிய தாவரம் தான் நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளி.

இதில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துகளும் உயர்தரமான நார்சத்தும் நிறைந்து உள்ளது இதில் விட்டமின் e மிகவும் அதிகமாக இருக்கும்.

வெய்யில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும் உஷ்ணத்தை குறைக்கவும் இந்த சப்பாத்தி கள்ளி பழம் உதவி புரியும்.

அதுமட்டுமின்றி சப்பாத்தி கள்ளியில் தயாரிக்கப்படும் சாறு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது என்று சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது சப்பாத்தி கள்ளியை வைத்து எப்படி ஜூஸ் செய்வது? இதன் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • சப்பாத்தி கள்ளி
  • எலுமிச்சை
  • ஆரஞ்சு ஜூஸ்
  • தேங்காய் நீர்

செய்முறை

சப்பாத்தி கள்ளியை எடுத்துக் கொள்ளவும் . அதன் முட்களை மெதுவாக விலக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்பு சப்பாத்தி கள்ளியை அந்த நீரில் போடவும்.

4-5 நிமிடம் உயர் தீயில் கொதிக்க விடவும். பின்பு நீரில் இருந்து சப்பாத்தி கள்ளியை எடுத்து ஆறவிடவும்.

ஆறியபின், அதன். தோல்பகுதியை நீக்கி சிறுசிறு துண்டுகளாக்கவும்.

அவற்றுடன் சிறிது எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ், தேங்காய் நீர் ஆகியவற்றை கலந்து மிக்ஸியில் அரைத்து சாறு தயாரிக்கவும். இந்த பழங்களை சேர்ப்பதால் இந்த பானத்தின் சுவை அதிகரிக்கும் .

பின்பு ஒரு வடிகட்டியில் சாற்றை வடிகட்டி, பின் பருகவும்.

இப்போது சப்பாத்தி கள்ளி ஜூஸின் நன்மைகளை காணலாம்.

இந்த சாறு பருகுவதால் சிலருக்கு குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற குடல்சார்ந்த பாதிப்புகள் ஏற்படலாம். ஆனால் அனைவருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை.

Google

நன்மைகள்

  • உங்கள் உடலுக்குப் போதுமான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. தேவையற்ற நேரத்தில் சிற்றுண்டிகள் எடுத்துக் கொள்வதும், அதிகமாக உணவு உட்கொள்ளும் உணர்வும் தடுக்கப்படுகின்றன.

  • சப்பாத்தி கள்ளி சாறு பருகுவதால் உடலில் உள்ள LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. மேலும் உடலில் கொழுப்பு படிவதைத் தடுப்பதால், இதய நோய் மற்றும் தமனித் தடிப்பு போன்ற அபாயங்கள் தடுக்கப்படுகின்றன.

  • சப்பாத்தி கள்ளி சாறு செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்துவதன் மூலமும், பெருங்குடல் அனைத்து நச்சுகளையும் வெளியிடுவதன் மூலமும் செயல்படுகிறது.

  • தலைவலி , குமட்டல் போன்றவற்றிற்கு இந்த சாறு சிறந்த தீர்வைத் தரும். அதிகமான மது அருந்துவதால் உண்டாகும் அழற்சிக்கு இதமளிக்கும் அழற்சி எதிர்ப்பு தன்மை இந்த சாற்றில் இருப்பதாக அறியப்படுகிறது.

  • மாதவிடாய் காலத்தில் அடிவயிற்றில் பெண்களுக்கு உண்டாகும் அசௌகரியத்தைப் போக்கவும், அதிகரித்த வலியைப் போக்கவும் சப்பாத்தி கள்ளி சாறு பருகலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...