ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா? இதை மட்டும் பின்பற்றுங்க... அதிசயம் நடக்குமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

சிறுதானிய வகை உணவுகளே அதிக பெயரால் விரும்பி சாப்பிடப்படும் ஓர் உணவு தான் கொள்ளு.

ஆயுர்வேத, சித்த மருத்துவத்திலும் கொள்ளு பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைவாக இருக்கின்றன.

அதிலும் தினமும் இந்த கொள்ளை உங்களின் டயட்டில் சேர்த்து கொண்டாலே ஒரே மாதத்தில் 5 கிலோ வரை குறைத்து விடலாம் என உணவியல் விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

அந்தவகையில் தற்போது இந்த கொள்ளை எப்படி உணவில் சேர்க்கலாம்? இதன் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

parenting

தேவையானவை

 • கொள்ளு 1/2 கப்
 • சீரகம் 1 ஸ்பூன்
 • தனியா 1 spoon
 • மிளகு 1 ஸ்பூன்
 • சிவப்பு மிளகாய் 3
 • கைப்பிடி அளவு கருவேப்பிலை
 • புளி 2 கொட்டை
 • தக்காளி 2
 • பூண்டு 10 பல்

செய்முறை

முதலில் கொள்ளை வேக வைத்து கொண்டு, நீரை தனியாக வடிகட்டி கொள்ளவும். மேற்சொன்ன தேவையான பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளுங்கள்.

பிறகு இதனுடன் மீண்டும் வேக வைத்த கொள்ளை சேர்த்து கொண்டு நன்றாக அரைத்து கொண்டால், கொள்ளு பருப்பு ரெடி.

இதனை தினமும் செய்து சாப்பிட்டு வந்தால் 5 கிலோ எடையை குறைந்து விடலாம்.

நன்மைகள் என்ன?

 • கொள்ளுவை கொண்டு தயாரித்த உணவை சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் மற்றும் கொலெஸ்ட்ரால்கள் கரைந்து விடும்.

 • ஒரு மாதம் முழுவதும் மதிய உணவு மற்றும் இரவு உணவில் இந்த கொள்ளுவை சேர்த்து கொண்டால் 5 கிலோ எடையை குறைத்து விடலாம்.

 • கொள்ளு சாப்பிட்டு வருவதால் விந்தணு குறைப்பாட்டை இது சரி செய்கிறது. இதில் உள்ள பாஸ்பரஸ், இரும்புசத்து, கால்சியம் போன்றவை விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

 • பெண்களின் மாதவிடாய் காலங்களில் வர கூடிய மாதவிடாய் வலிகளை போக்குவதற்கு இந்த கொள்ளுவை சாப்பிட்டாலே போதும். மேலும், இது ரத்தத்தின் அளவை சீராக வைத்து கொள்ள உதவுகிறது.

 • கொள்ளுவை சாப்பிடுவதால் கிட்னியில் சேரக்கூடிய கால்சியம் ஆக்ஸலேட் கற்கள், கரைக்க படுகிறது.

 • கொள்ளுவில் அதிக படியான புரதச்சத்துக்கள் உள்ளன. இதனால், உடலின் தசைகள் புத்துணர்வு பெறும். மேலும், அதிக ஆற்றலுடன் நீங்கள் இருப்பீர்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...