மூல நோயில் இருந்து விரைவில் விடுபட இதோ ஓர் அற்புத வழி!

Report Print Kavitha in ஆரோக்கியம்

கோடைக்காலத்தில் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மூல நோய் என்று அழைக்கப்படும் பைல்ஸ்.

பொதுவாக 45-65 வயதிற்குட்பட்டோர் மூல நோயால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

இது ஆசன வாய் பகுதியை தொடும் போது, அவ்விடத்தில் ஏதேனும் வீக்கம் இருப்பதைக் கண்டால், பைல்ஸ் உள்ளது என்று அர்த்தம்.

குறிப்பாக ஆசன வாய் பகுதியைச் சுற்றி கடுமையான அரிப்பு ஏற்பட்டால், அது மூல நோய் உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

மூல நோயால் சந்திக்கும் அசௌகரியங்கள் என்பது, வலி, எரிச்சல், இரத்தம் வடிதல், குத வாயின் வழியே சளி வெளியேற்றம், குத வாயில் அரிப்பு போன்றவையாகும்.

இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்தால், நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம். அதுவே கண்டு கொள்ளாமல் சாதாரணமாக விட்டுவிட்டால், ஆசன வாயில் புண் மற்றும் புற்றுநோய்க்கு வழி வகுத்து விடுகின்றது.

அந்தவகையில் மூல நோய் பிரச்சனையிலிருந்து இயற்கை முறையில் எப்படி தீர்வு காணலாம் என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
  • கற்றாழை இலை - 1
  • அலுமினிய தகடு
செய்முறை

முதலில் கற்றாழை இலையின் மேல் உள்ள பச்சை தோலை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின் அந்த ஒவ்வொரு துண்டுகளையும் அலுமினிய தகடு கொண்டு சுற்றி, ஃப்ரீசரில் வைக்க வேண்டும்.

பின்பு இரவில் படுக்கும் முன் உறைய வைத்த ஒரு கற்றாழை துண்டை எடுத்து, அலுமினிய தகடை நீக்கி, பின் அதை குத வாயில் சொருக வேண்டும்.

குறிப்பு

இந்த செயலை தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், மூல நோயால் சந்திக்கும் அசௌகரியங்களில் இருந்து விடுபட்டிருப்பதைக் காணலாம்.

crhsystem

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...