இரவு முழுவதும் ஊற வைத்த ஓட்ஸை தினமும் சாப்பிடுங்க.. உடல் எடை சட்டென குறையுமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்று மக்கள் மத்தியில் அதிகமாக உட்கொள்ளப்படும் உணவாக ஓட்ஸ் உள்ளது .

அதிலும் வேக வைத்து உட்கொள்ளும் ஓட்ஸை விட அதிக ஊட்டச்சத்து கொண்டது ஊற வைத்த ஓட்ஸ் சிறந்தது என்று கருதப்படுகின்றது.

ஏனெனில் இரவு முழுவதும் ஊற வைக்கப்படுவதனால் ஓட்ஸ் மற்றும் அது ஊற வைக்கப்படும் திரவம் ஆகிய இரண்டிலும் உள்ள ஊட்டச்சத்துகள் பாதுகாப்பாக சேமிக்கப்படுகின்றன.

இது நீண்ட நேரம் ஈரமாக இருப்பதால் ஓட்ஸில் உள்ள ஸ்டார்ச் உடைக்கப்பட்டு ஓட்ஸில் உள்ள அசிட்டிக் அமிலம் குறைக்கப்படுகிறது. இதனால் ஓட்ஸ் எளிதில் ஜீரணமாகிறது.

அதுமட்டுமின்றி இது உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்குகின்றது. குறிப்பாக உடல் எடையை குறைக்க பெரிதும் உதவி புரிகின்றது.

ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட ஓட்ஸ் மென்மையாக இருப்பதால் காலையில் உட்கொள்வது மிகவும் எளிதாக இருக்கும்.

அந்தவகையில் இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட ஓட்ஸ் எப்படி தயாரிப்பது? அதனை சாப்பிடுவதனால் வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இங்கு பார்ப்போம்.

ஊறவைக்கப்பட்ட ஓட்ஸ் எப்படி தயாரிப்பது?

பால், தண்ணீர், பாதாம் பால், தேங்காய் பால், தயிர் போன்ற ஏதாவது ஒன்றில் ஓட்ஸை ஊறவைத்துக் கொள்ளுங்கள்.

மறுநாள் காலை இதனை அப்படியே உட்கொள்ளலாம் அல்லது வாழைப்பழம், திராட்சை, மாதுளை, அன்னாசி, கிவி, ஆரஞ்சு, ஸ்டராபெர்ரி போன்ற பழங்களை சேர்த்தும் உட்கொள்ளலாம்.

மேலும் இதன் சுவையை அதிகரிக்க பிஸ்தா, உலர்ந்த திராட்சை, வால்நட், முந்திரி, பாதாம் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனை எப்படி உட்கொண்டாலும் சுவையும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

Google
நன்மைகள் என்ன?
  • நீண்ட நேரம் ஈரமாக இருப்பதால் ஓட்ஸில் உள்ள ஸ்டார்ச் உடைக்கப்பட்டு ஓட்ஸில் உள்ள அசிட்டிக் அமிலம் குறைக்கப்படுகிறது. இதனால் ஓட்ஸ் எளிதில் ஜீரணமாகிறது.
  • இரவு முழுவதும் ஊற வைக்கப்பட்ட ஓட்ஸ் சாப்பிடுவதனால் உங்கள் எடை வேகமாகக் குறையும்.
  • அதிக நார்ச்சத்து காரணமாக நீண்ட நேரம் உங்களுக்கு பசி எடுக்காமல் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும்.
  • உங்கள் குடலில் உள்ள அழுக்குகள் சுத்தம் செய்யப்பட்டு அதிக கொழுப்புகள் குறையும்.
  • ஊற வைத்த ஓட்ஸில் ஸ்டார்ச் குறைக்கப்படுவதால், உடலில் உள்ள இன்சுலின் அளவு அதிகரிக்கிறது.
  • ஓட்ஸ் சாப்பிடுவதனால் கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்கப்பட்டு நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது.
  • உயர் இரத்த அழுத்தம் மற்றும். நீரிழிவு போன்றவற்றிற்கு மிகுந்த நன்மை அளிக்கிறது ஓட்ஸ். இதனால் இதய நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்