சர்க்கரை நோயாளிகள் வேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்ளலாமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

பல்வேறு நோய்களை குணப்படுத்தப் பயன்படும் பழமையான மற்றும் பாரம்பரியமான மூலிகைகளில் ஒன்று தான் வேப்பிலை.

இதன் இலைகள் மட்டுமல்ல, பூ, பட்டை, பழம், தண்டு மற்றும் வேர்கள் போன்ற மரத்தின் பிற பகுதிகளும் பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சையளிக்க பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

வேப்பின் முக்கிய கூறுகள் அசாதிராக்டின் மற்றும் ஆல்கலாய்டுகள், பினோலிக் கலவைகள், ட்ரைடர்பெனாய்டுகள், ஃபிளாவனாய்டுகள், கீட்டோன்கள் மற்றும் ஸ்டெராய்டுகள் போன்ற பிற சேர்மங்களுடன் அடங்கும்.

பல வகை நோய்களை தீர்க்க இந்த வேப்பிலை ஒரு ஆய்வு ஒன்றின் போது நீரிழிவு நோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.

அந்தவகையில் சர்க்கரை நோயாளிகளுக்கு வேம்பு எவ்வாறு நன்மையளிக்கிறது என்பதை பற்றி இங்கு காணலாம்.

food.ndtv
நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்பிலை எவ்வாறு உதவி புரிகின்றது?
  • நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த வேம்பை எடுத்துக்கொள்ளலாம்.
  • வேப்ப இலை சாறு மற்றும் விதை எண்ணெயை நான்கு வாரங்களுக்கு உட்கொண்டால், இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
  • நீரிழிவு நோய் வருவதைத் தாமதப்படுத்தவோ அல்லது தடுக்கவோ வேம்பின் சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • தொடர்ந்து, நோயாளிக்கு இன்சுலின் ஊசிபோடுவதைக் குறைக்க வேம்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • வேம்பு டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் எதிர்ப்பு அல்லது இன்சுலின் சரியாக இருக்காத நிலை உடலில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
  • மூலிகையின் இலை அக்வஸ் சாறு உடலில் குளுக்கோஸ் அளவை சமமாக வைக்க உதவுகிறது. இதனால் இன்சுலின் உணர்திறன் மேம்படுகிறது.
நீரிழிவு நோயாளி உகந்த வேம்பு காபி தயாரிப்பது எப்படி?
  • அரை லிட்டர் தண்ணீரில், சுமார் 20 வேப்ப இலைகளை சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • இலைகள் மென்மையாகவும், தண்ணீர் கொஞ்சம் பச்சை நிறமாகவும் மாறும்போது, அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
  • பின்னர் வடிகட்டி, அருந்தலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம்.
முக்கிய குறிப்பு

குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த சுகாதார நிபுணருடன் முறையான ஆலோசனையின் பின்னரே இதைச் செய்ய வேண்டும்.

ஏனெனில் சில தயாரிப்புகளுடன் வேம்பை எடுத்துக்கொள்ளும்போது, சில சமயங்களில் நோயாளிக்குப் பாதகமான விளைவை ஏற்படுத்தக்கூடும்

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்