தப்பி தவறி கூட பாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க... ஆபத்தாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

உண்ணும் உணவுப் பொருட்களிலேயே பால் மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது.

ஏனெனில் இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், புரோட்டீன்கள், ஆரோக்கியமான கொழுப்புக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன.

அதுமட்டுமின்றி புரதச்சத்து, A, B1, B2, B12, D போன்ற வைட்டமின் சத்துக்கள், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் பாலில் அதிக அளவில் இருக்கிறது.

பாலில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் D, எலும்பிற்கு மிகுந்த வலிமையையும், உறுதியையும் தருகிறது. தினமும் பால் பருகுவதால், எலும்பு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

இவ்வளவு நன்மைகள் அள்ளித்தரும் பாலை சரியான உணவு முறையுடன் சேர்த்து உண்ணுவது அவசியம்.

மேலும் பாலை சில உணவுகளுடன் சேர்த்து உண்ணும் போது உடலுக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில் பால் குடிக்கும் முன் எந்த உணவுப் பொருட்களை எல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • சிட்ரஸ் பழங்களை உட்கொண்ட பின் பாலைக் குடித்தால், உங்களுக்கு வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
  • பாகற்காயை உட்கொண்ட பின் பால் குடிக்கக்கூடாது. ஏனெனில் பாகற்காய் சாப்பிட பின் பால் குடித்தால், அது முகத்தில் கருமையான புள்ளிகளை உண்டாக்கும்.
  • உளுத்தம் பருப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்ட பின் பால் குடிக்கக்கூடாது. இந்த இரண்டையும் ஒருவர் ஒன்றாக உட்கொண்டால் அது அடிவயிற்று வலி, வாந்தி மற்றும் உடல் பாரமாக இருப்பது போன்றவற்றை சந்திக்கக்கூடும்.
  • முள்ளங்கியை உட்கொண்டதும் பால் குடிக்கக்கூடாது. ஒருவர் இவ்வாறு இரண்டையும் ஒன்றாக உட்கொண்டால், அது பல்வேறு சரும பிரச்னைகளை சந்திக்க வைக்கும்.
  • மீன் உட்கொண்டதும் பாலைக் குடிக்கக்கூடாது. இவ்வாறு குடித்தால், செரிமான மண்டலம் பாதிப்படையும். சில சமயங்களில் மீன் உட்கொண்டதும் பால் குடித்தால், ஃபுட் பாய்சனிங், அடிவயிற்று வலி மற்றும் உடலில் வெள்ளைப் புள்ளிகள் வரக்கூடும்.
  • வெண்டைக்காய் சாப்பிட்டதும் பால் குடித்தால், முகத்தில் அசிங்கமான கரும்புள்ளிகள் வரக்கூடும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
  • பெர்ரிப் பழங்களை சாப்பிட்ட பின் பால் குடிக்கக்கூடாது. அவ்வாறு குடித்தால், முகத்தில் பல சரும பிரச்னைகளை உண்டாக்கும். குறிப்பாக அரிப்பு, முகத்தில் சுருக்கங்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்