யோனிப் பகுதியில் ஏற்படும் அரிப்பை போக்க வேண்டுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக பெண்களுக்கு அடிக்கடி யோனிப்பகுதியில் அரிப்பு, நமநமப்பு, எரிச்சல், வலி போன்றவை ஏற்படும்.

ஏனெனில் நாம் இறுக்கமான உள்ளாடைகளை அணியும் போது அவை நமது சருமத்துடன் உராயும் இதுபோன்ற அரிப்பு ஏற்படுகின்றது.

அதுமட்டுமின்றி யோனிப்பகுதியில் அரிப்பு ஏற்பட பல வகையான காரணங்கள் சொல்லப்படுகின்றது.

அதில் குறிப்பாக உடலுறுவின் போது பிறப்புறுப்பில் ஏற்படும் உராய்வு ,சுய இன்பம் காணுதல் , இறுக்கமான உள்ளாடைகள் ,நாப்கின் ,அந்த பகுதியில் ஏற்படும் அதிகப்படியான வியர்த்தல். ,உடல் பருமன் போன்றவற்றால் கூட அரிப்பு ஏற்படுகின்றது.

இது மட்டுமின்றி, கெமிக்கல் நிறைந்த வெஜினல் காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது அதிலுள்ள ஆல்கஹாலால் அரிப்பு, எரிச்சல், வறட்சி ஏற்படுதல் முடிகளை நீக்கும் லேசர் முறைகள், வேக்சிங் செய்தல் போன்றவற்றால் சருமம் சிவந்து போய் அரிப்புடன் காணப்படும்.

மேலும் பாதிக்கப்பட்ட யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பு, வலி, சரும பிளவுகள், சிவத்தல், தோல் உரிதல், தொடும் போது வலி மற்றும் அரிப்பு ஏற்படுதல் போன்றவை அறிகுறிகளாகும்.

அந்தவைகயில் யோனிப்பகுதியில் ஏற்படும் அரிப்பை குறைக்க சில இயற்கை முறைகளும் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.

இதனை எப்படி இயற்கை முறையில் சரி செய்யலாம்?
  • கொஞ்சம் தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட சருமத்தில் ஒரு இரண்டு தடவை என போட்டு வந்தால் போதும் யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பு எல்லாம் காணாமல் போகும்.
  • 1 டீஸ்பூன் பட்டர், 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி 30 நிமிடங்கள் விட்டு விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை என செய்து வாருங்கள்.
  • யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பை போக்க ஒரு கைப்பிடியளவு வேப்பிலையை எடுத்து கைகளைக் கொண்டு நசுக்கியோ அல்லது பேஸ்ட்டாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 1/2 மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள்.
  • கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை என சில நாட்களுக்கு செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
  • இறுக்கமான உள்ளாடைகளை தவிர்த்து நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணிய வேண்டும்.
  • குளித்து முடித்த பிறகு பிறப்புறுப்புப் பகுதியில் கொஞ்சம் பேபி பவுடர் போடலாம்.
  • நன்றாக அந்தப் பகுதியை உலர்த்தி விடுங்கள்.
  • உடலுறவின் போது உராய்வு ஏற்படாமல் இருக்க எண்ணெய் பயன்படுத்தலாம்.
  • ஈரமான துணியை வெகுநேரம் அணிய கூடாது.
  • பிறப்பிறுப்பில் முடிகளை நீக்கும்போது கவனமாக எடுக்க வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்