நீங்கள் பானி பூரியை அடிக்கடி விரும்பி சாப்பிடுபவரா? பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துமாம்! எச்சரிக்கை

Report Print Kavitha in ஆரோக்கியம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு நொறுக்கு தீண்பண்டமாக பானிபூரி உள்ளது.

இன்று பல விற்பனையாளர்கள் மூலைமுடுக்கெல்லாம் தள்ளுவண்டி கடைகளிளும், கூடைகளில் வைத்தும் பானி பூரி விற்கிறார்கள்.

இது உலகம் முழுவதும் இதனை அனைவரும் ரசித்து ருசித்து உண்ணுகின்றனர். இருப்பினும் இது உடலுக்கு கெடு எனப்படுகின்றது.

காரம், புளிப்பு என சுவை மிகுந்து காணப்படும் பானி பூரியில் எவ்வித சத்துகளும் பெரிதாக ஒன்றும் இல்லை இதனை அடிக்கடி சுகாதாரமற்ற முறையில் உண்ணுவதால் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றது.

குறிப்பாக பானி பூரிக்குப் பயன்படும் முக்கிய மூலப்பொருள்கள் மைதா மற்றும் பேக்கிங் சோடா. இதனை அடிக்கடி சாப்பிடும் போது உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றது.

அந்தவகையில் தற்போது பானி பூரி சாப்பிடுவதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி இங்கு பார்ப்போம்.

Google
  • பானி பூரியை தொடர்ச்சியாக உணவில் சேர்த்துவந்தால் உடல் பருமன் அதிகரிக்கும். மேலும், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • மீண்டும் மீண்டும் பயன்படுத்திய எண்ணெயில் பொரிக்கப்பட்ட பூரியை எடுத்துக்கொண்டால், உடலில் கெட்ட கொழுப்பு சேரும். இது புற்றுநோயை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது.
  • பானி பூரியில் பான் மசாலா கலப்பதாக கூறப்படுகிறது. பான் மசாலாவும் ஒருவகைப் புகையிலைப் பொருள்தான். இதனால் புகையிலையால் ஏற்படக்கூடிய புற்றுநோய் போன்ற பல பிரச்னைகளுக்கு உள்ளாக நேரிடும்.
  • பானி பூரியில் அதிகளவு சோடியம் உள்ளதால் முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் பானி பூரியை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
  • பானி பூரி விற்பவரின் கைகளில் பாக்டீரியா தொற்று ஏதேனும் இருந்தால், அவரிடம் இருந்து நாம் வாங்கி சாப்பிடும் பானி பூரியால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை பிரச்னைகள் ஏற்படலாம். மேலும் பானி பூரி அதிகம் சாப்பிடுவதால் டைபாய்டு ஏற்படுவதற்கான அபாயமும் அதிகம் உள்ளது.
  • பானிபூரிக்கு புதினா ரசம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர் சுகாதாரமற்றதாக இருந்தால் அதுவும் உடலுக்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்