இரவு தூங்கும் முன் பாதங்களை மசாஜ் செய்வதால் இவ்வளவு நன்மையா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய காலகட்டத்தில் வேலைக்கு செல்லும் அனைவரும் பல வித உடல் வலிகளை நாளுக்கு நாள் சந்தித்து கொண்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக நாள்தோறும் நின்றபடியே வேலை செய்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் சுலபமாக தாக்குகிறது.

அப்படிப்பட்டவர்கள் தினந்தோறும் பாதங்களுக்கு மசாஜ் செய்துவிட்டு தூங்கினாலே போதும் நல்ல பலனை பெறலாம்.

குறிப்பாக தினசரி இரவு தூங்குவதற்கு முன்பு 10 முதல் 15 நிமிடங்கள் பாதங்களுக்கு மசாஜ் செய்வதால் சீரான இரத்த ஓட்டத்திற்கு வழி வகுக்குமாம் என்று கருதப்படுகின்றது.

அந்தவகையில் பாதங்களுக்கு மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு பார்ப்போம்.

Google
  • குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் தூங்குவதற்கு முன்பு 10 நிமிடங்கள் உங்கள் பாதங்களை மசாஜ் செய்யுங்கள். இதன்மூலம், உடலில் இரத்த ஓட்டம் சமமாகி, நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுப்பதால், இரத்த அழுத்தம் சீராகும்.
  • வலி இருக்கும் மூட்டு பகுதியில் எண்ணெய் தடவி மசாஜ் செய்தாலே அதிகப்படியான வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். அதுவும் சற்று வெதுவெதுப்பான எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்தால் அதை விட சிறப்பான பலன் கிடைக்கும்.
  • எலும்பு குறைபாடு உள்ளவர்கள் எண்ணெய் மசாஜ் தொடர்ந்து செய்வது நல்லது. இதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கு கண்டிப்பாக எண்ணெய் மசாஜ் செய்யுங்கள்.
  • மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு ஏற்படக்கூடிய சில வலிகளுக்களில் ஏற்படும் தருணங்களில் நல்ல பாத மசாஜ் போதும் எல்லா கவலைகளையும், வலிகளையும் ஒதுக்கி வைத்துவிடலாம்.
  • இரவு தூங்குவதற்கு முன்பு பாதங்களுக்கு மசாஜ் செய்ய சொல்வதனால் இரத்த ஓட்டம் சீராவதால் மன அழுத்தம் நீங்கி நல்ல தூக்கமும் வரும். சீரான இரத்த ஓட்டம் தசை பிடிப்பு மற்றும் உடற்சோர்வு ஆகியவற்றை நீக்குகின்றது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்