அன்றாடம் ஒமேகா 3 கொழுப்பமிலத்தை அவசியம் உள்ளெடுக்க வேண்டியதன் காரணம்?

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்

எமது அன்றாட உணவில் ஒமேகா 3 கொழுப்பமிலத்தைக் கொண்ட உணவுகளை உள்ளெடுப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கப்பெறுகின்றன.

இவ் அமிலமானது மீன் போன்ற கடல் உணவுகளிலும், சோயா மற்றும் சில காய்கறி வகைகளிலும் காணப்படுகின்றன.

மேலும் மற்றைய கொழுப்பமிலங்களைப் போலன்றி ஒமேகா 3 கொழுப்பமிலத்தை எமது உடலால் தானாக உற்பத்தி செய்ய முடியாது.

எனவே இவற்றினை மேற்கண்ட உணவு வகைகள் மூலமே உள்ளெடுக்க முடியும்.

அவ்வாறு தினமும் ஒமேகா 3 கொழுப்பமிலத்தை உள்ளெடுப்பதால் உண்டாகும் நன்மைகளை பார்க்கலாம்.

மனச் சோர்வு மற்றும் பதட்டத்தை தவிக்கக்கூடியது

மனச்சோர்வு மற்றும் பதட்டம் என்பன பொதுவான மனது தொடர்பான நோய்கள் ஆகும்.

இவற்றின் அறிகுறிகளாக துக்கம், சோம்பல் தன்மை மற்றும் வாழ்க்கையில் விருப்பமின்மை என்பன காணப்படுகின்றன.

எனவே இவற்றினைத் தவிர்ப்பதற்கு ஒமேகா 3 கொழுப்பமிலம் பெரிதும் உதவுவதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஏற்கனவே மேற்கண்ட நோய் அறிகுறிகள் காணப்பட்டவர்கள் ஒமேகா 3 கொழுப்பமிலத்தினை உள்ளெடுத்த பின்னர் குறித்த நோய்களில் இருந்து விடுபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.

ஒமேகா 3 கொழுப்பமிலத்தின் வகையைச் சேர்ந்த Docosahexaenoic அமிலம் கண்ணுக்கு கிடைக்காதபோது பார்வைக் கோளாறுகள் ஏற்படும்.

இது நிரந்தரமான கோளாறாகவும் மாறலாம்.

எனவே ஒமேகா 3 கொழுப்பமில உணவுகளை உட்கொள்வதன் மூலம் இப் பிரச்னையிலிருந்து விடுபட முடியும்.

குழந்தைகளில் கவனக்குறைவு மற்றும் மந்த தன்மையை குறைக்கும்

ஆய்வுகளின் ஊடாக குழந்தைகளில் ஏற்படும் கவனக்குறைவு மற்றும் மந்தமாக செயற்படும் தன்மை என்பவற்றினை ஒமேகா 3 கொழுப்பமிலம் குறைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்