பூச்சி கடியால் பெரும் அவதியா? இதோ எளிய வழி

Report Print Kavitha in ஆரோக்கியம்

பூச்சுக்களின் கூட்டை மனிதர்கள் களைக்கும்போதோ அல்லது அவற்றை சீண்டும்போதும், தெரியாமல் நடப்பதாலும் பூச்சுகள் மனிதர்களை கடித்துவிடுகின்றன.

இதனால் தோலின் நிறம் மாறும், வீக்கம் ஏற்படும், சிகப்பான தடிப்புகள் மற்றும் அலர்ஜி போன்றவை ஏற்படுகின்றது.

இருப்பினும் சில வகை பூச்சுக்களின் விஷம் உடலில் பரவும்போது உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.

மேலும் பூச்சுக்கடிகளின் வலி மிகக்கொடுமையாக இருக்கும். இதனால் தோல் சம்மந்தமான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அந்தவகையில் இவற்றை வீட்டில் இருந்தபடியே சிகிச்சை அளிக்க முடியும். தற்போது எப்படி பூச்சு கடியில் இருந்து விடுபடலாம் என பார்ப்போம்.

jcarillet / Getty Images
  • தேயிலை மர எண்ணெயில் 2 சொட்டுக்கள் மற்றும் தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்புன் கலந்து பூச்சிக்கடித்த இடத்தில் தடவ வேண்டும். தினமும் 2 முறை இவ்வாறு தடவலாம்.
  • வேப்ப எண்ணெயில் 2 சொட்டுக்கள் மற்றும் தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்புன் கலந்து பூச்சிக்கடித்த இடத்தில் தடவ வேண்டும். தினமும் 2 முறை இவ்வாறு தடவலாம்.
  • ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை மூன்று டீஸ்பூன் தண்ணீரில் கலக்கவும். இந்த கரைசலில் ஒரு பருத்தி பஞ்சை நனைத்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். இதை நீங்கள் தினமும் 2-3 முறை செய்யலாம்.
  • ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு தேக்கரண்டி தண்ணீரில் கலக்கி ஒரு பருத்தி பஞ்சை கலவையில் நனைத்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். அதை தண்ணீரில் கழுவும் முன் குறைந்தது 20-30 நிமிடங்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்க வேண்டும். தினமும் 2-3 முறை செய்யலாம்.
  • ஒரு பருத்தி துணியைப் பயன்படுத்தி, சில கற்றாழை ஜெல்லை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு தடவவும். அதை கழுவுவதற்கு முன் குறைந்தது 30 நிமிடங்களுக்கு அப்படியே இருக்கவிடவும். தினமும் 2-3 முறை செய்யலாம்.
  • ஒரு டீஸ்பூன் ஆர்கானிக் தேனை பருத்தி துணியில் ஊற்றி நனைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 30 நிமிடங்கள் காயவிட வேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவவும். தினமும் பல முறை செய்யலாம்.
  • ஒரு கப்பில் ஆல்கஹாலலை ஊற்றி பருத்தி பந்தை அதில் ஊறவைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்க்க வேண்டும். இதை தினமும் 1-2 முறை செய்யலாம்.
  • சிறிதளவு தண்ணீரில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்க்கவும். நன்கு கலந்து ஒரு தடிமனான பேஸ்ட் போன்று செய்துகொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 20-30 நிமிடங்கள் காய வைக்க வேண்டும். தினமும் 1- 2 முறை செய்யலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்