வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படும் தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும் என்படுகின்றது.

வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு.

என்னத்தான் வெள்ளரிக்காயில் நன்மைகளை வழங்கினாலும் வெள்ளரிக்காயில் சில பக்க விளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது.

அந்தவகையில் தற்போது வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படும் என்பதை இங்கு பார்ப்போம்.

Google

  • வெள்ளரிக்காயில் இருக்கும் குக்குர்பிடசின்கள் மற்றும் டெட்ராசைக்ளிக் ட்ரைடர்பெனாய்டுகள் போன்ற நச்சுகள் கசப்பு சுவையை ஏற்படும். இந்த நச்சுக்களை அதிகளவு எடுத்துக்கொள்வது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

  • வெள்ளரி விதைகள் கக்கூர்பிட்டின் உள்ளதால் பெரிய அளவில் உட்கொள்ளும்போது உடலில் இருந்து அதிகப்படியான திரவத்தை வெளியேற்றி உங்கள் உடலின் எலெக்ட்ரோலைட்டுகளின் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது அதிகரிக்கும்போது உங்கள் உடலில் நீர்சத்து முழுவதுமாக இருக்காது.

  • வெள்ளரியில் வைட்டமின் சி உண்டு. இதனை அதிகளவு வைட்டமின் சி எடுத்துக்கொள்ளும்போது நமது உடலில் நச்சுக்களின் அளவு அதிகரிக்கிறது. இதன் விளைவாக புற்றுநோய், முகப்பருக்கள், முன்கூட்டியே வயதாகுதல் போன்ற ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

  • வெள்ளரியில் அதிகம் பொட்டாசியம் இருப்பதால் இதனை அதிகளவு எடுத்து கொள்ளும போது ஆரம்பத்தில் வீக்கம், வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வாயுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. நாளடைவில் இதன் நிலை மோசமாகி சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது உங்கள் சிறுநீரக அமைப்பை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளது.

  • வெள்ளரிக்காயில் அதிகமாக தண்ணீர் உள்ளதால் அதிக மது அருந்தும் பழக்கம் இதை அதிகம் சாப்பிட தூண்டக்கூடும். அதிகளவு நீர் இருப்பது, இரத்தத்தின் நிகர அளவை அதிகரிக்கும். இதனால் இரத்த நாளங்களிலும், இதயத்திலும் அழுத்தம் ஏற்படும். இதனால் உங்கள் இதயம் மற்றும் இரத்த நாளங்கள் தேவையற்ற சேதங்களை ஏற்படும்.

  • வெள்ளரிக்காயில் கக்கூர்பிட்டாசின் எனப்படும் மூலப்பொருள் உள்ளதால் இது சிலருக்கு கடுமையான அஜீரணத்தை ஏற்படுத்தும், குறிப்பாக செரிமான மண்டலம் பலவீனமாகி உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

  • மனிதர்களுக்கு வெள்ளரிக்காயின் ஒவ்வாமை எதிர்விளைவுகள் உண்டு. இதனால் ஒவ்வாமை உள்ளவர்கள் வெள்ளரிக்கையை தவர்ப்து நல்லது.

  • உங்களுக்கு சைனசிடிஸ் அல்லது சுவாசக் கோளாறுகள் இருந்தால், வெள்ளரிக்காய் சாப்பிடுவதிலிருந்து விலகி இருப்பது நல்லது.

  • வெள்ளரி டையூரிடிக் தன்மை கொண்டதால் கர்ப்ப காலத்தில் இதனை தவரிப்பது நல்லது. ஏனெனில் இது அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தூண்டும், இதனால் உங்களுக்கு எரிச்சலும், சங்கடமும் ஏற்படும்.

  • வெள்ளரிகள் நார்ச்சத்து அதிகமுள்ள ஒன்றாகும், எனவே இதனை அதிகமாக சாப்பிடுவது உங்களை வீக்கமடையச் செய்யலாம்.

பக்க விளைவுகளை எப்படி தவிர்ப்பது?

வெள்ளரிக்காயை ஓடும் நீரின் கீழ் நன்கு கழுவ வேண்டும். வெள்ளரிக்காயின் நச்சுத்தன்மையில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவதை உறுதி செய்யவும்.

பச்சை வெள்ளரி சாப்பிடுவது உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தினால் அதனை வேகவைத்து அல்லது வறுத்து சாப்பிடவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்