எந்தெந்த தொழில் செய்யும் பெண்களுக்கு இதய நோய் பிரச்சனை ஏற்படும்? அதற்கு காரணம் என்ன?

Report Print Kavitha in ஆரோக்கியம்

தற்போது ஆண்களை விட பெண்களுக்கும் இதய நோய் பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆரோக்கியமற்ற உணவு, உடற்பயிற்சி, உடல் உழைப்பு இல்லாமை, மற்றும் புகைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கை முறைகளால் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்றது.

அதுமட்டுமின்றி ஒருவர் செய்யும் தொழில் கூட இதய நோய் ஏற்பட காரணமாக அமையும் என்று ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

அந்தவகையில் யாருக்கு எல்லாம் இதய நோய் வரும்? அதற்கு காரணம் என்ன என்பதை தற்போது அங்கு பார்ப்போம்.

இதய நோய் ஏற்பட காரணம் என்ன?

 • அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகள், உடல் உழைப்பு இல்லாமை, உடல் பருமன், மனஅழுத்தம், புகைபிடித்தல், குடிப்பழக்கம், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்தல் இதயத்தின் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும்.

 • பணிச்சுமை, கவலை, பதற்றம், மன உளைச்சல், அதீத கோபம், வீட்டுச்சூழல், வெளிப்புறச்சூழல் உள்ளிட்ட காரணங்கள் இதயத்துக்கு எதிரான பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

 • புகைபிடிக்கும் பெண்களுக்கும், கருத்தடை மாத்திரை பயன்படுத்துபவர்களுக்கும் இதய நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகமுள்ளது.

 • விருப்பமில்லா வேலையைச் செய்யும் போது ஒருவித வெறுப்பு மனநிலை ஏற்பட்டு வேலையில் மன அழுத்தம் ஏற்படும். மேலும் வேலையில் மன அழுத்தம், அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்வது போன்ற காரணங்கள் இதய நோய் பிரச்சனைகளுக்கு வித்திடுகின்றன.

எந்த தொழில் செய்யும் பெண்களுக்கு வரும்?

பெண் சமூக செயல்பாட்டாளர்கள் மேற்கொள்ளும் பணியினால் 36% அவர்களுக்கு இதய நோய் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

சில்லறை வணிகம் செய்யும் பெண்களுக்கு 33% இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சுகாதார உதவியாளர்கள் மற்றும் மனநல மருத்துவர்களுக்கு 16% இதய நோய் பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறதாகவும் தெரிவிக்கின்றனர்.

14% இதய பாதிப்புடன் செவிலியர்களுக்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.

இதய நோய்க்கான அறிகுறிகள் என்ன?

 • உடல் எடை வேகமாக அதிகரித்தல்
 • உறங்குவதில் சிரமம்
 • வியர்வை
 • தலைச்சுற்றல்
 • கால் மற்றும் அடிவயிறு வீக்கம்
 • பசியின்மை
 • உடல் சோர்வு
 • சளி மற்றும் இருமல்
 • மூச்சுத்திணறல்
 • படபடப்பு
 • தோலின் நிறம் மாறுதல்
 • சீரற்ற இதயத்துடிப்பு
 • இதய வலி

இதிலிருந்து எப்படி பாதுகாப்பது?

 • இருதய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு இருக்க வேண்டும்.

 • நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் இதயப் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

 • மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பதை அறிவது மிகவும் முக்கியமானது.

 • யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை தினமும் செய்வதால் பதற்றம், கவலை மற்றும் மன அழுத்தம் இல்லாமல் வாழலாம்.

 • ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சி செய்வது, போதுமான நேரம் தூக்கம் என்பவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்