சைனஸா பிரச்சினையா? கவலை வேண்டாம்.. இந்த பானத்தை குடித்து பாருங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்று பலருக்கு சைனஸ் பிரச்சினை பெரும் அவதியாக உள்ளது.

ஒருவருக்கு இருந்தால், அடிக்கடி தும்மல், மூக்கடைப்பு, தலைவலி, மூக்கு ஒழுகுதல் போன்றவை இருக்கும்.

மேலும் கண்களுக்கு கீழே, கன்னம், நெற்றி போன்ற இடங்களில் தொட்டால் வலி ஏற்படும்.

அந்தவகையில் சைனஸ் பிரச்சனையை உண்டாக்கும் கிருமிகளை அழிக்க ஆப்பிள் சிடர் வினிகர் பெரிதும் உதவியாக இருக்கின்றது.

ஏனெனில் ஆப்பிள் சிடர் வினிகரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளது.

இதனை சைனஸ் பிரச்சனைக்கான அறிகுறிகள் தெரியும் போது, பச்சையாக உட்கொண்டால், உடனடி நிவாரணம் கிடைப்பதோடு, வேறுசில நன்மைகளும் கிடைக்கும்.

தற்போது ஆப்பிள் சிடர் வினிகரை கொண்டு சைனஸ் பிரச்சினைக்கு எப்படி தீர்வளிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • தண்ணீர் - 1/2 கப்,
  • ஆப்பிள் சிடர் வினிகர் - 1/4 கப்,
  • தேன் - 1 டேபிள் ஸ்பூன்,
  • மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,
  • எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)

தயாரிக்கும் முறை:

முதலில் நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும். பின் அதில் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்பு அத்துடன் தேன் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

இறுதியில் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்தால், பானம் தயார். இந்தப் பானத்தை சைனஸ் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும் வரை தினமும் ஒரு டம்ளர் பருகலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்