ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா? இந்த மூலிகை இப்படி பயன்படுத்துங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

நமது முன்னோர் எந்த நோயாக இருந்தாலும் அந்த காலத்தில் இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.

இன்றைய காலகட்டத்தில் கூட சில இந்த மூலிகை நிறைய உடல் உபாதைகளை சரி செய்கிறது.

மேலும் கூந்தலின் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்தில் இது மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்தவகையில் லேடீஸ் மேன்டில் ( Lady's mantle) என்ற மூலிகை இடைக்காலத்தில் இருந்தே மருத்துவத் துறையில் பயன்பட்டு வருகிறது.

இதன் அறிவியல் பெயர் Alchemilla ஆகும். ஐரோப்பா மற்றும் ஆசியாவின் குளிர்ந்த, மிதமான பகுதிகளுக்கு சொந்தமானது.

இது ஆரோக்கியம் மற்றும் அழகு கலையிலும் பெரிதும் பங்கு வகிக்கின்றது.

தற்பாது இந்த மூலிகையால் ஏற்படும் நன்மைகளை பற்றி இங்கு பார்ப்போம்.

Anne Green-Armytage / Getty Images

  • லேடீஸ் மேன்டில் மூலிகை வயதாவதை தடுக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சரும நெகிழ்வுத் தன்மையை நீண்ட காலத்திற்கு பராமரிக்கிறது. எனவே உங்களுக்கு வயதானாலும் சருமம் இளமையாக இருக்கும்.

  • லேடீஸ் மேன்டிலில் உள்ள டானின் என்னும் பொருள் தான் அஸ்ட்ரிஜெண்ட் போன்று செயல்படுகிறது. எனவே இதை உங்கள் சருமத்திற்கு தினசரி பயன்படுத்தி வரலாம்.

  • கூந்தல் வளர ஆசைப்படுபவர்கள் லேடீஸ் மேன்டிலை பயன்படுத்தி வரலாம். ஏனெினல் கூந்தல் செல்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதனால் கூந்தல் வளர்ச்சி தூண்டப்படுகின்றது.

  • நமக்கு ஏற்படும் சின்னக் காயங்கள், தீப்பட்ட காயங்கள், கீறல்களை இந்த மூலிகையை கொண்டே சரி செய்ய இயலும். ஏனெனில் இது ஸ்டைப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது.

  • பெண்களின் மாதவிடாய் போக்கை சரிசெய்கிறது. இதிலுள்ள சாலிசிலிக் அமிலம் மாதவிடாய் வலிகளுக்கு நல்ல வலி நிவாரணியாக செயல்படுகிறது.

  • பெண்களின் யோனி பகுதியை சுத்தம் செய்கிறது. ஈஸ்ட் தொற்று, அரிப்பு, வெள்ளை வெளியேற்றம் போன்றவை வராமல் தடுக்கிறது.

  • பிரசவத்திற்கு பிறகு பாலூட்டும் பெண்களின் மார்பகத்திலும் வயிற்றிலும் ஏற்படும் தழும்புகளை போக்க இது பயன்படுகிறது.

  • பல் அறுவை சிகிச்சைக்கு பின், லேடீஸ் மேன்டிலில் இருந்து பெறப்பட்ட சாற்றை கொண்டு வாயை கழுவும் போது, அப்பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம், மற்றும் அதை விரைவில் குணமடையச் செய்யலாம்.

  • இது பசியை அதிகரிக்க உதவுகிறது. வயிற்று வலியை தணிக்கிறது

  • சீரண சக்தியை எளிதாக்குகிறது. சர்க்கரை நோயாளிகளின் இரத்த ஓட்ட பிரச்சனையை சரிசெய்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்