இரவு நேரங்களில் வேலை செய்வதனால் இவ்வளவு ஆபத்தா? உடனே படியுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய காலக்கட்டத்தில் வேலைக்கு செல்லும் ஆண்களும் சரி பெண்களும் இரவு நேர வேலை எளிதாக இருக்கும் என்று நினைத்து இதனை தேர்ந்தெடுப்பதுண்டு.

ஆனால் இதனால் நாம் நினைத்திராத பல ஆரோக்கிய பிரச்னைகளால் அவஸ்தைப்படுவதுண்டு.

அந்தவகையில் இரவு நேர வேலை செய்வதனால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • 16 மணிநேரத்திற்கும் அதிகமாக வேலை செய்வோருக்கு சர்க்கரை நோயின் அபாயம் உள்ளது.
  • ஒழுங்கற்ற இரவு நேர வேலை தூக்க முறைகளை சீர்குலைக்கும் மற்றும் தூக்கத்தை இழக்கச் செய்யும்.
  • இரவு வேலை செய்தால், ஒருவரது ஆரோக்கியம் மட்டுமின்றி, சிறப்பாக செயல்படும் ஆற்றலும் பாதிக்கப்படும்.
  • இரவு வேலை செய்தால் மன இறுக்கத்திற்கான அபாயத்தை அதிகரிக்கும். ஏனெனில் இரவு நேரத்தில் கிர்காடியன் அமைப்பின் இயற்கை செயல்பாட்டிற்கு இடையூறை உண்டாக்கும் வகையில் வேலை செய்வதால் மன இறுக்கம் அதிகரிக்கும். மேலும் இது சந்தோஷத்தைக் பாழாக்கும்.
  • பசியுணர்வை சீராக தூண்டுவதற்கு உதவும் லெப்டின் என்னும் ஹார்மோன் இரவு நேரத்தில் குறைவாக சுரப்பதால், இரவு நேரத்தில் அதிகமாக பசி எடுத்து, கட்டுப்பாடு இல்லாமல் அதிகமாக உணவை உண்ண வைக்கும். இதன் விளைவாக உடல் பருமன் அதிகரிக்கும்.
  • இரவு நேர வேலை இதய நோயின் அபாயத்தை 40 சதவீதம் அதிகரிக்கும்.
  • இரவு வேலை செய்வதனால் உடல் களைப்பு மட்டுமின்றி, வயிற்று உப்புசம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற இரைப்பைக் குடல் நோய்களை உண்டாக்கும்

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்