உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சாதம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்று உடல் பருமன் பல நாடுகளில் பல ஆண்களும் பெண்களும் பெரும் அவதிப்பட்டு கொண்டு வருகின்றனர்

எந்த ஒரு உணவுப் பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது உடல் பருமனை உண்டாக்கி விடுகின்றது.

தற்போது உடல் பருமனைக் குறைப்பதற்கு டயட் என்ற உணவுக் கட்டுப்பாடு பலரால் பின்பற்றப்பட்டு வருகிறது.

இதில் பலர் டயட் என்ற பெயரில் சாதம் சாப்பிடுவதைத் தவிர்த்து வருகின்றனர். உண்மையில் சாதம் சாப்பிடுவதனாலும் உடல் எடையினை குறைக்க முடியும் என கூறப்படுகின்றது.

ஏனெனில் சாதத்தில் அதிகளவிலான கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் நிறைந்துள்ளது.

அதுமட்டுமின்றி சாதத்தில் கொழுப்பு மிகவும் குறைவு, எளிதில் செரிமானமாகும் மற்றும் ஏராளமான வைட்டமின் பி சத்துக்களும் அடங்கியுள்ளது.

அதே சமயம் சாதத்தில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் சற்று அதிகளவில் உள்ளது.

எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சாதத்தை சாப்பிட விரும்பினால், தங்களது டயட்டில் ஒரு சிறிய கப் அளவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உடல் எடை குறைந்து சிக் என்று வர முடியும்.

அந்தவகையில் தற்போது நீண்ட நேரம் பசி எடுக்காமல் சாதத்தினை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பார்ப்போம்.

ஒருவர் சாதத்தினை எப்படி சாப்பிட வேண்டும்?

ஒரு சிறிய கப் அளவு சாதத்துடன், புரோட்டீன் நிறைந்த உணவுப் பொருட்களான பருப்பு, ராஜ்மா மற்றும் காய்கறிகளை சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.

இவைகளில் புரோட்டீன் மட்டுமின்றி, நார்ச்சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.

குறிப்பு

தினமும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்வதோடு, சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும்.

உண்ணும் உணவில் கட்டுப்பாடு இருப்பது அவசியமானது ஆகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்